உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130

மறைமலையம் 12

பிறக்கப்போவதால் வைகறை வழிபாடு நடத்துவதற்கு வேண்டுவன ஒழுங்கு செய்தற் பொருட்டுச், சிறிது முன்னதாகவே நேற்றிரவு கோயிலுக்குப் போயிருந்தேன்.

நயினார் : : இருக்கலாம், அதன் பின் என்ன?

அம்பிகாபதி : கோயிலிலிருந்து வீட்டுக்குத் திரும்பி வரும்போது நகர்க்காவலனும் அரண்மனைத் தோட்டக் காரனும் என் பின்னே போந்து, அரசன் வழிபாட்டிற் கென்றுள்ள தோட்டத்தின் பூக்களைக் களவு செய்யுங் கள்வனாக என்னைக் கருதி, அரசன்பால் அழைத்துச் சென்றனர். யான் கள்வன் அல்லன் என்று எவ்வளவோ சொல்லியும் அவர்கள் என் சொல்லை ஏற்றுக் கொண்டிலர்.

நயினார்: அரசன் நின்னைப் பார்த்ததுந் திடுக்கிட் டிருப்பாரே!

அம்பிகாபதி : ஆம். அரசன் மருண்டு “என்ன கம்பர் மகன் அம்பிகாபதியை அழைத்து வந்திருக்கிறீர்களே?” என்று வினவ,

66

வரைப்பற்றி எனக்கொன்றுந் தெரியாது. மன்னர் பெரும! இதோ தோட்டக்காரனும் அவன் மனைவியும் 'இவனே அரண்மனைத் தோட்டப் பூக்களைத் திருடினவன்' என்று காட்டினர்” என நகர்க்காவலன் கூறினன். அரசன் திகைத்து, உடனே உன் தந்தையார் நம்பிப்பிள்ளையைத் தம்மால் வருவித்தனர்.

நயினார் : என் தந்தையார் வந்தேது செய்தார்?

அம்பிகாபதி : நின்னருமைத் தந்தையார் செய்த உதவி எழுமையும் மறக்கற் பாலதன்று. (இச்சொற்களைக் கேட் டதுங் காவேரி கண்களைத் துடைத்துக்கொண்டு பின் சொல்வதை ஆவலோடு கேட்கின்றாள்) அமைச்சர் தோட்டக் காரனை நோக்கி, 'நல்லது, நேற்றிரவில் எந்நேரத்தில் தோட்டத்திற் புகுந்து இவர் பூக்களைப் பறித்தார்?, என்று கேட்க, 'நள்ளிராப் பதினைந்து நாழிகை' என்றான். முன்னிருட்டுக் காலமாயிற்றே, அதில் இவரை எப்படிக் கண்டுபிடித்தாய்?' என்று நின் தந்தையார் வினவ, அவன்

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/163&oldid=1580765" இலிருந்து மீள்விக்கப்பட்டது