உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

129

இருக்கின்றது! என்னுயிர் தத்தளிக்கின்றது! உண்மையைச் சொல்லுங்கள்!

நயினார் : காவேரி! எனக்கும் முழுச்செய்தியுந் தெரியாது. பதறாதே! அஞ்சாதே! நகர்காவற்றலைவன் அம்பிகாபதியை அழைத்துக்கொண்டு விடியற்கருக்கலில் அரசனிடஞ் சென்றன னாம். அரண்மனைத் தோட்டக்காரனும் அவன் மனைவியும் உடன் சென்றனராம். இன்னுஞ் சிறிது நேரத்தில் முழுச்செய்தியும் தெரிந்துவிடும்.

இது கேட்டுக் காவேரி சோர்ந்து இருக்கைமேல் விழுகின்றாள். சிறிது நேரத்தில் அம்பிகாபதி வருகின்றான்)

அம்பிகாபதி : (மாளிகைமேல் வந்து) ஆ! என் தங்கைக்கு யாது நேர்ந்தது? நயினார், பச்சே, நீங்களேன் அவள் மேற் கவிந்து கொண்டிருக்கின்றீர்கள்?

நயினார் : அம்பிகாபதி, நின்னைப் பார்த்ததும் எனக் குயிர் வந்தது! (இச்சொற் கேட்டதுங் காவேரி உணர்வு கூடி எழுந்து)

காவேரி : அண்ணா, அண்ணா நகர்க் காவலன் உங்களை அரசனிடம் அழைத்துச் சென்றனனாமே! என்ன குற்றம்? (தமையனை கட்டிக்கொண்டு அழுகின்றாள்)

அம்பிகாபதி : (மருண்டு) குழந்தாய், ஏன் அழுகின்றாய்? ஏதுங் குற்றமில்லை, தீங்குமில்லை. ஆள் மாறாட்டமாய் என்னை நகர்க்காவலன் நம்மரசன்பால் அழைத்துச் சன்றான்.

நயினார் : யார் செய்த குற்றத்தற்காக அவன் உன்னை அழைத்துச் சென்றான்? அக்குற்றந்தான் யாது? தோட்டக் காரனும் அவன் மனைவியும் நின்னையேன் பின்றொடர்ந்து வந்தனர்? சென்ற இரவு நீ எங்கு சென்றாய்? ஏன் சென்றாய்? கடுங்குளிர் மிகுந்த இப் பனிக்காலக் கங்குலில் வெளியே உனக்கென்ன வேலை? உண்மையைச் சொல்!

நீ

6

அம்பிகாபதி : என் தந்தையார்க்காக யான் ஊர்ப்புறத்தே

யுள்ள ஐயை கோயிலில் வழிபாடாற்றி வருவது தான் 은 உனக்குத் தெரியுமே. நாளை மார்கழித்திங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/162&oldid=1580764" இலிருந்து மீள்விக்கப்பட்டது