உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128

நான்காம் நிகழ்ச்சி : நான்காம் காட்சி

களம் : கம்பர் இல்லம்.

காலம் : காலை நேரம்

நயினார் பிள்ளை : பச்சே! பச்சே! நான் வந்திருப்பதாக நின் தலைவிக்குத் தெரிவி.

சாமி!

தோழி : (தெரிவித்து வந்து) மாளிகைமேல் வாருங்கள்

நயினார் : கண்மணி காவேரி? நின் தமையன் எங்கே?

காவேரி : (திடுக்கிட்டு) நேற்றிரவு வெளியே சென்றவர் இன்னும் வரவில்லை. சுவாமி! நீங்கள் இவ்வளவு விடியற் காலையில் வந்து அவரைத் தேடுவதுகண்டு என் உள்ளங் கலங்குகின்றது!

நயினார் : கலங்காதே கண்ணே! என் தந்தையார்க்குச் சிறிது நேரத்திற்கு முன்னேதான் நம் அரசரிடமிருந்து அழைப்பு வர, அவர் அங்கே சென்றிருக்கின்றார். செல்லும் போது உன்னை அச்சமின்றியிருக்கச் செய்யும்படி என்னை இங்கு ஏவினார்.

காவேரி : (மனம் பதைத்து) என்ன சுவாமி! நீங்கள் சொல்வது எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே! தமையனார்க்கு ஏதுந் தீங்குண்டோ? திறந்து சொல்லுங்கள்.

என்

நயினார் : நின் தமையனார்க்கு ஏதுந் தீங்கு வராது. என் தந்தையார் அதற்குத் தக்கது செய்வார்.

காவேரி : : சுவாமி! உண்மையைச் சொல்லுங்கள்! சொல்லுங்கள்! என் அண்ணனாரைப் பற்றிய செய்தி ஏதோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/161&oldid=1580763" இலிருந்து மீள்விக்கப்பட்டது