உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

141

அருந்தவப்புதல்வி அமராவதியின் தோட்டத்து மதிற்புறத்தே அக்கள்வன் மறைந்து போயதும், பின்னர்ப் பத்து நாழிகை கழித்து மீண்டும் அவன் அப்பக்கத்தேயுள்ள ஐயை கோயிற் பக்கமாய்க் காணப்பட்டதும். அங்ஙனங் காணப்பட்டவன் அம்பிகாபதி

யாயிருப்பதும் ஆழ்ந்தாராயற் பாலன. அல்லதூஉம், தோட்டக் காரன் சொல்லிய சொல்லொன்றை அவன்றன் மனைவி மறைத்து வேறு முகமாய்த் திருப்பிப் பேசியதிலும் ஒரு நுணுக்கமிருக்கின்றது.

அரசன் : ஆம், ஆம், பெருமான். இது முதலில் என் னறிவில் தட்டுப்படவில்லை. அம்பிகாபதி எம் அருமைப் புதல்விக்குப் பாடஞ் சொல்லிவருவது தாங்கள் அறிந்தது தானே? ஆனாலும், இளைஞரான அவ்விருவரும் ஒருவரை யொருவர் பாராமலே பாடம் நடக்கும்படி நாம் திட்டஞ் ஞ் செய்திருப்பதுந் தாங்களறிவீர்க ளன்றோ? ஆதலால், ஏதும் பிசகு நடப்பதற்கு இடமேயில்லை.

ல்

கூத்தர் : : உண்மைதான்! என்றாலும், இளைஞராயிருக் கும் ஆண் பெண் பாலாரை நெருங்கவிடல் முறையன்று. நம் நண்பர் கம்பர்தாந் திரும்பி வந்துவிட்டனரே. முன்போல அவரே அமராவதிக்குப் பாடஞ் சொல்லட்டுமே.

அரசன் : ஆம், புலவர் திலகமான கம்பர் தாமியற்றிய இராமாயணத்தை மிக்க சிறப்புடன் திருவரங்கத்தில் திருமாலடியார் குழுவில் நன்கு அரங்கேற்றிவைத்து வரிசை கள் பல பெற்று வந்திருக்கிறார்; ஏறக்குறையப் பத்துத் திங்கள் கழித்து அவர் வந்திருத்தலால் இன்னும் ஒரு கிழமை வரையில் ஓய்வாயிருந்து அவர் அயர்வு தீர்த்துக் கொண்டபின், அவரே புதல்வி அமராவதிக்குப் பாடங் கற்பிக்க ஏற்பாடு செய்கிறேன். கூத்தர் : நல்ல தங்ஙனமே ஏற்பாடு செய்க; நான் போய் வருகிறேன்.

அரசன் : புலவர்

பெருமானுக்குத்

கொடுத்து விட்டேன். வணக்கம். போய் வாருங்கள்.

தொல்லை

(கூத்தர் போய் விடுகிறார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/174&oldid=1580776" இலிருந்து மீள்விக்கப்பட்டது