உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

மறைமலையம் 12

அரசன் : (தனியேயிருந்து தனக்குள்) முன்னமே அம்பிகாபதியைப் பற்றி நான் கொண்ட ஐயுறவினைக் கூத்தர் கூறிய சொற்கள் இன்னும் மிகுதிப்படுத்துகின்றன! ஆனாலும், அரசனாயிருக்கும் நான் தக்க சான்றின்றி அம்பிகாபதியின் மேல் ஐயுறுதல் ஆகாது. மேலும், கூத்தர் அம்பிகாபதி மேலும் அவன் றந்தை மேலும் நிரம்பிய அழுக்காறுடையவர். எனினும், அவர் கூறிய அறிவுரையை நான் பாராமுகஞ் செய்தலும் ஆகாது. இன்று தொட்டே அவன் பாடஞ் சொல்லுவதை நிறுத்திவிடுகின்றேன். தன் தங்கை காவேரி கல்வியறிவும் நுண்ணறிவும் நிரம்பியவளென்றும் அவள் அமராவதியுடனிருந்து நெடுகப் பழகும்படி நான் கட்டளை தந்தால் அமராவதி கலைப்புலமையில் மிக்க தேர்ச்சியடைதற்கு அஃதொரு சிறந்த வழியாமென்றும் அம்பிகாபதி முன்னமே எனக்குத் தெரிவித்திருக்கின்றான். ஆகையால், இன்று முதலே காவேரி என் புதல்வியுடனிருந்து கலை பயிலும்படிசெய்து விடுகின்றேன். “தவத்துக்கொருவர் கல்விக்கிருவர்” என்று பழமொழியும் உளதன்றோ? தம் புதல்வியும் உடனிருந்து பாடங்கேட்டால் கம்பர் இன்னுந் திறமாகக் கற்பிப்பார்.

இயற்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/175&oldid=1580777" இலிருந்து மீள்விக்கப்பட்டது