உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மறைமலையம் 12

இந்த உலகத்தில் நடப்பவராகவே தோன்றவில்லை; தீது செய்யும் மக்களிடையே தாம் இருப்பதாகவும் தம்மை நினைக்க வில்லை. உனது நிலைமையும் நி மையும் ஏறக்குறைய அப்படித்தானிருக் கின்றது. முட்செடிகளினிடையே கிளம்பிய நெற்பயிர் போலிருக்கும் உங்கள் நிலைமையை நினைந்தாவது, நீ நின் மனத்தைத் தேற்றிக்கொள்ளல் வேண்டும்.

அமராவதி : யான் மனந்தேறுவதற்கு ஏதேனும் வழி யிருந்தாற் சொல்.

நீலம் :

வழியிருக்கின்றது. நேற்றுப் பிற்பகல் நம் தந்தையார், புலவர் பெருமான் ஒட்டக்கூத்தரைத் தம்பால் வருவித்துப் பேசினர்.

அமராவதி : ஐயோ! இரக்கமில்லா அந்தக் கொடும் பாவியையா? அவர் ஏழை எளிய புலவர்களையெல்லாந் தலையறுத்த தறுகண்ணராயிற்றே!

நீலம் : அவருடன் பேசியிருந்த பிறகுதான், நம்மரசர் நின் வரவேண் ா மென்று

காதலரைப் பாடங்கற்பிக்க நிறுத்திவிட்டார். ஆனாலும்

அமராவதி : இன்னுமென்ன?

நீலம்: நின் காதலிரின் தங்கை காவேரி அழகுங் கல்வியும் நற்குணங்களும் வாய்ந்தவளாம் அவளை நின்னுடன் கலந்து பழகச் செய்தால் நினக்குக் கலைப்பயிற்சியில் மிக்கதேர்ச்சியு முண்டாகுமாம். ஆதலால், அவள் இன்று முதல் இங்கு வந்து நின்னுடன் கலை பயிலும்படி நின் தந்தையார் ஏற்பாடு செய்திருக்கின்றனர்.

வாள்?

அமராவதி : (மகிழ்ந்து)அவள் எப்போது இங்கு வரு

நீலம் : இன்னுஞ் சிறிது நேரத்தில் தன் தந்தை கம்பர் பெருமானுடன் அவள் இங்கு வரக்கூடுமென்று நினைக் கின்றேன்.

(கம்பர் தம் மகள் காவேரியுடன் வர நீலம் எதிரே வந்து)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/177&oldid=1580779" இலிருந்து மீள்விக்கப்பட்டது