உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

145

வரவேண்டும், வரவேண்டும், ஆசிரியர் பெருமான்

திருவடிகளுக்கு வந்தனம்.

கம்பர் : நீடு வாழ்க! அம்மா நீலம், குழந்தை அமராவதி நலமாயிருக்கின்றனளா? உங்களை யெல்லாம் பார்த்து நீண்ட நாளாயிற்று. (அமராவதி மெல்ல வந்து வணங்க) குழந்தாய்! என்ன! நின் திங்கள் முகஞ் சிறிது இளைத்திருக்கின்றது! யாது காரணமோ?

நீடூN

வாழ்தி!

நீலம் : சாமி, சில நாட்களாக அமராவதிக்குக் குளிர் காய்ச்சல். இப்போதுதான் சிறிது நலம்.

கம்பர் : குழந்தாய் அமராவதி! நம்பிராட்டி கலைமகள் திருவருளால் நீ முழுநலம் பெற்று நன்கு வாழக்கடவை. இதோ! இவள் என் ஒரே மகள் காவேரி! முத்தமிழுஞ் செவ்வையாய்ப் பயின்றிருக்கின்றாள். இவள் உனக்கு மற்றுமொரு தோழியாய் அமர்ந்து, நீலத்துடன் உனக்கு வேண்டிய பணி செய்யவும், உங்களுடன், கூடித் தமிழ்ப் பயிற்சி செய்யவும், நின் தந்தையார் கட்டளைப்படி நின்னிடம் இருக்க இவளை அழைத்து வந்திருக்கிறேன். இவள் எப்போதும் உன்னிடமே இருக்கட்டும். இவள் வேண்டும்போது மட்டும் எங்கள் இல்லம் வந்து திரும்ப விடை கொடு.

அமராவதி : (காவேரியைப் பார்த்துப்பார்த்து மகிழ்ந்து அருகழைத்து அணைத்துக் கொண்டு) ஆசிரியர் பெருமான் திருவுளப்படியே! (காவேரியை நோக்கி) அம்மா! காவேரி நீ எங்களுக்குக் தேடக்கிடையாப் பெருஞ் செல்வம். கண்மணி! நீ எங்களுடனேயே மகிழ்ச்சியாயிருக்க வேண்டும்.

காவேரி : (வணங்கி) இளவரசியாருடன் ஒருங்கிருந்து பயில யான் என்ன தவஞ் செய்தேன்!

கம்பர் : குழந்தாய் அமராவதி! யான் இப்போது இல்லஞ் சன்று இன்னும் ஒரு கிழமையிற் பாடஞ்சொல்ல வருகின்றேன். உடம்பைச் செவ்வையாய்ப் பார்த்துக் கொள்!

(மூவரும் வணங்கப், போய்விடுகின்றார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/178&oldid=1580780" இலிருந்து மீள்விக்கப்பட்டது