உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மறைமலையம் 12

அமராவதி : அம்மா காவேரி நீ சிறிது நேரம் இந்நூல் நிலையத்திலுள்ள சுவடிகளைப் பார்த்துக்கொண்டிரு. நானும் நீலமும் பூந்தோட்டத்துக்குப்போய் வருகின்றோம். இ இங்குள்ள தோழிமார் உனக்கு வேண்டியது செய்வர். (நீலத் துடன் பூந்தோட்டத்திற் புகுந்து ஒரு தனியிடத்திருந்து) நீலம், என்னடி பெரு வியப்பா யிருக்கின்றதே! காவேரி தன் தமையனாரைப் போலவே யிருப்பதை நீ உற்று நோக் கினையா?

நீ

நீலம் : ஆம், அம்மா! யான் கம்பர் இல்லத்திற்கு நின் பொருட்டுச் சென்ற நாட்களிளெல்லாம் நின் காதலரின் அழகிய வடிவம் அவர் தங்கை காவேரியின் வடிவும் முற்றும் ஒத்திருத்தல் கண்டு நிரம்பவும் வியப்படைந்தேன்.

அமராவதி:

கண்ணோ குவளையிதழ் கருங்குழலோ கார்க்கொண்டல்

வண்ண இதழோ வளர்பவளம் அதனருகே நண்ணுமுறுவல் நகுமுத்தம் நகை முகமோ விண்ணார் மதியினொளி விரவும் வேறென்னை!

வானிற் றிகழும் மதியொளி வாய்ந்தஇம் மங்கைமுகம் பானிறத் திங்களின் வட்ட வடிவின்றிப் பார்ப்பதற்கு மேனின்று கீழே சிறிதே குவிந்து மெழுகுநிகர்

ஊனிற் செழித்தென் கணவன் முகத்தையும் ஒத்திடுமே!

இருவர்க்கும் மேனி மெழுகிற் றிருத்திநன் கேற்படுத்த பொருவற்ற பாவையின் வண்ணமும் மென்மையும் பூண்டிடுமால் உருவுற்ற பான்மையில் ஆண்மையிற் பெண்மையும் ஓங்கு பெண்ணில் மருவுற்ற ஆண்மையும் மற்றிவர் பாற்கண்டு மாழ்கினெளே

அண்ண லுருவினில் அம்மையுருவம் அளவினல்லால் நண்ண லியலா அறிவுங்கலையும் நலமுமென்று திண்ண முறவே அறிவிற்பெரியார் தெரிக்குமுரை

பெண்ணிற் சிறந்தவிப்பூவையின் முன்னோன் பிறக்கினனே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/179&oldid=1580781" இலிருந்து மீள்விக்கப்பட்டது