உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அம்பிகாபதி அமராவதி

அழகியராயினும் ஆண்மை யுருவோ டதிர்ந்துநிற்குங் குழகரை அஞ்சுவென் கொவ்வை யிதழுங் குளிர்ந்தகண்ணுங் குழலின் மொழியும் அடங்கு முளமுங் குறிப்பறியுங்

கிழமையும் வாய்ந்தவென் கேள்வனைக் கண்டோ கிளர்குவெனே

147

நீலம் : ஆம் அம்மா, நின் கணவரைக் கண்டால் அச்சமின்றி அவருடன் பேசலாம் என்னும் எண்ண முண்டா கின்றது. வேறு ஆடவர் சிலரைக் கண்டாலோ அவர் அழகியராயினும், அவர்பால் அச்சமே உண்டாகின்றது. கலை வல்லார் உடம்பிலும் உயிரிலுங் கலைமகளின் திருவருள் கலந்திருத்தலால் அவர் அழகிய மாதர் வடிவினைப் பெரும் பாலும் ஒத்திருக்கின்றனர். இவ்வியற்கையைக் கற்றார் பலர் மாட்டுங் கண்டிருக்கின்றேன்.

அமராவதி : நீலம், யான் தன் தமையன்மேற் காதல் மிக்கு ஆற்றேனாதலைக் காவேரி அறிந்தால் என்னைப்பற்றி யாது நினைப்பளோ என்று என் நெஞ்சந் தயங்குகின்றதடி!

நீலம் : அதைப்பற்றி நீ சிறிதுங் கலங்க வேண்டுவ தில்லை. நின் கணவரை முதன் முதல் நின்பால் வருவித்தற்குக் காவேரியைக் கலந்துதான் ஏற்பாடு செய்தேன். நீங்கள் இருவீருங் காதலிற் கலந்து வருவதை அவள் நன்கறிவள்.

அமராவதி : எங்கள் காதலொழுக்கத்தை அறிந்ததும் அவள் யாது சொன்னாள்?

நீலம் : அதனை யான் சொல்லக் கேட்டதும் அவள் உணர்விழந்து கீழே விழுந்துவிட்டாள். அதற்குக் காரணமா யிருந்த யான் எவ்வளவு மனந் துடித்து மாழ்கியிருக்க வேண்டும் என்பதை நீயே எண்ணிப்பார்.

அமராவதி : அபபுறம் நிகழ்ந்ததென்ன? அதையுடனே

சொல்!

கூவி

நீலம் : எனக்கின்னது எனக்கின்னது செய்வதென்று ஏதுந் தோன் றாமல், அவளின் ஆருயிர்த் தோழி பச்சையைக் யழைத்தேன். அவள் ஓடி வந்தாள். அவளைக் கூவியழைத்த ஓசை கேட்டு அமபிகாபதியும் ஓடி வந்தார். யாங்கள் மூவருங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/180&oldid=1580782" இலிருந்து மீள்விக்கப்பட்டது