உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148

மறைமலையம் 12

கூடி ச் செய்த முறைகளால் அவள் உணர்வு கூடிக் கண்களைத் திறந்தாள். எங்களுக்கும் உயிர் வந்தது.

66

அமராவதி : அதன் பின் நிகழந்ததென்ன?

நீலம்: சொல்கிறேன், அது கேட்டு நீ வருந்தாதே! அருகே தன் தமையனைக் கண்டதும் அவரைக் கட்டிக் கொண்டு பொருமிப் பொருமி அழத் துவங்கி விட்டாள்! அவர் எவ்வளவோ தேறுதல் சொல்லிய பின் சிறிது மனந் தெளிந்து அண்ணா! உங்களுயிர் நம்மரசர் கையிலன்றோ சிக்கி யிருக்கின்றது! எந்நேரத்தில் ஏதாய் விளையுமோ என்பதை நினைக்க நினைக்க என்னுயிர் என்னுடம்பில் நில்லாமல் தத்தளிக்கின்றதே! என்னண்ணா செய்வேன்!” என ஆற்றாது சொல்லிக் கண்ணீர் ஆறாய்ப் பெருக்கினள்!

அமராவதி : (கண்கலங்கி) இதைக் கேட்க என் நெஞ்சம் அனலிடை மெழுகாய் உருகுகின்றது எல்லா வகையிலுஞ் சிறந்தவரான தன் தமையனாரைப் பிறந்தது முதல் தன்னோடு உடன் வளர்ந்து பழகித் தனக்கு உயிர் போன்றிருக்குந் தன் ஒரே தமையனாரைப் பறி கொடுப்பதென்றால் அவளுக்கு எங்ஙனந்தான் மனந் துணியும்? பாவியாகிய யான் ஏன்தான் பிறந்தேன்? என்னாலன்றோ என்னுயிரினுஞ் சிறந்த என் கேள்வற்கும் அவர்தந் தங்கைக்கும் இனி அவர் தந்தைக்கும் அளவிலாத் துயரம்? யான் என்னுயிரை மடித்துவிட்டால் அவர்களெல்லாரும் என் தந்தையின் சீற்றத்திற்குத் தப்பி நலமுடன் வாழ்வரன்றோ! (இது சொல்லிக் கீழே சோர்ந்து விழுகின்றாள்)

து

னி

(தோழி நீலம் மிக்க அச்சத்துடனுங்

கலக்கத்துடனும்

இளவரசியை எடுத்தணைத்து அச்சோர்வு தீரச் செய்ய வேண்டுவன செய்ய, இவ்விருவரும் நெடுநேரமாகியிந் திரும்பி வராமை கண்ட காவேரி மனந்திடுக்கிட்டு இவர்களைத் தேடிக் கொண்டு பூந்தோட்டத்துட் போந்து, இளவரசியின் சோர்வு கண்டு திகைப்பும் வருத்தமும் எய்தி, நீலத்தால் நிகழ்ந்ததை அறிகின்றாள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/181&oldid=1580783" இலிருந்து மீள்விக்கப்பட்டது