உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150

மறைமலையம் 12

பிறப்பா லுயர்ந்தஎம் பேதையைக் கீழோன் பிணையமனந் திறப்பா னெனினவன் நெஞ்சைப் பிளந்து செகுத் திடுவேன் மறப்பான்மை மிக்க எம்மன்னர் குலத்தில் மறைந்தொரிழி பிறப்பாளன் போதத்துணிந்திடின் அன்னான் பிழைப்பதின்றே! என்றெந்தை சீறிச் செருக்கொடு கூறும் எரிவுரைகேட் டன்றென்று முள்ளம் அனலிடைப்பட்டே அழி புழுப்போல் பொன்று மிதுதப்பிப் போம் வழி காண்கிலேன்; பொன்னனையாய்! என்றுன் றமையனைக் காண்பதென்றுள்ளமும் ஏங்கிடுமே

காவேரி : இளவரசியார் அதற்குங் கலங்க வேண்டு வதில்லை. நம்மையெல்லாம் ஒருங்கு கூட்டுவித்த நம் ஆண்டவனே நமக்கு ஏதுந்தீங்கு நேராமல் மீண்டும் நம்மை நிலை பெறக் கூட்டுவிப்பவன்; அதுகாறும் நாம் சிறிது பாறுமை யோடிருக்கவேண்டும்.

அமராவதி : கண்மணி காவேரி! நின் தமையனைக் காணா நிரயவாழ்க்கையைப் பொறுத்திருப்ப தெங்ஙனம்? இதற்கொரு வழிசொல். நின்னைக்கண்ட பின்னரே நின் தமையனைக் கண்டாற்போல் மனந்தேறினேன். ஆனாலும், நின் அழகிய உருவம் நின் தமையனுருவை முழுதும் ஒத்திருத்தலால், நின்னைக் காணுந்தோறும் நின்றமையனைத் பற்றிய நினைவு னுள்ளத்தை முற்றுங்கவர்ந்து எழுந்த

என்

வண்ணமாயிருக்கின்றதே!

காவேரி : அம்மா! எனக்கு ஏதொரு வழியுந் தோன்ற வில்லை! நுண்ணுர்வு வாய்ந்த நந்தோழி நீலந்தான் இதற் கொரு வழிசெய்ய வேண்டும்.

நீலம் : அம்மா அமராவதி! நம் ஆசிரியர் கம்பர் இன்னும் ஒரு கிழமையில் நமக்குப்பாடஞ் சொல்ல வருவர்; வந்தால் அவரை நம்மரசர் இரவில் தமதில்லஞ்செல்ல விடார்; நமதரண்மனையிலேயே இருக்கச் செய்வார். இவ்வாறே முன்னெல்லாம் நடந்து வந்திருக்கின்றது. தம் தந்தையார் வீட்டில் இல்லாத நாட்களிலேதாம் நின் கேள்வர் நின்பால் வருதல் கூடும். அந்நாட்களில் நம்மருமைத்தோழி காவேரி தன்னிலல்லத்திற்கு ஏக நீ விடை கொடுப்பையானால் நின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/183&oldid=1580785" இலிருந்து மீள்விக்கப்பட்டது