உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154

மறைமலையம் 12

வரவில்லையே! உன்னைக் காணாமல் எனக்கு நோய் மிகுதியாய் விட்டதே! (அம்பிகா பதியைப் பார்த்து) இந்தப் பிள்ளை யார்?

நயினார் : அம்மா! இவர் கம்பர் மகன் அம்பிகாபதி; என்னுயிர்த் தோழர்; இவர்க்குதவியாகச் சில சில முயற்சிகள் தொடர்ந்து செய்யவேண்டி நேர்ந்தமையால் யான் சில நாட்கள் இங்கே வரக்கூடாதாயிற்று. உங்கட்கு அதனால் நோய் மிகுதிப்பட்டமைக்கு மிக வருந்துகின்றேன்; பிழை பொறுத்தல்

வேண்டும்.

அரங்கம்மாள் : உன்பாற் உன்பாற் பிழையொன்றுமில்லை. உன் ஆருயிர் நண்பனுக்கு நீ உற்றவிடத்து உதவி செய்ய வேண்டுவது பெருங் கடமைதான்.(அம்பிகாபதியை நோக்கி) அப்பா அம்பிகாபதி, நீ சிறு பிள்ளையாய் இருந்த போது நின் தந்தையாருடன் நீ என் கணவரிடம் வரும்போதெல்லாம் உன்னைத் தூக்கி எடுத்து முத்தமிட்டிருக்கின்றேன். நின் தந்தையார்க்கும் என் கணவற்குமுள்ள மெய்யன்பின் நேசத் தால் நின் தந்தையாரை என் அருமைத் தமையனாராகவே கருதி அன்பு பாராட்டி வந்தேன்; அவரும் என்னைத் தம்முடன் பிறந்த தமக்கையாகவே கருதி அன்பு பாராட்டி வந்தார். என் கணவர் காலமான பிறகோ நின் தந்தையார் இங்கே வருவதில்லை. அந்தப் பாவி ஒட்டக்கூத்தன் பழிச்சொற்களைப் பரப்புவான் என்ற அச்சமே அதற்குக் காரணம் அதனால், அருமைக் குழந்தே! உன்னையும் யான் பார்க்க முடியாப் பாவியானேன்! (கண்ணீர் சொரிகின்றாள்)

L

6

அம்பிகாபதி : அம்மா, அழாதீர்கள்! நோயால் மெலிந் திருக்கும் நீங்கள் அழுதால் நோய் மிகுதிப்படும், இனி, யான் இங்கு வராமல் இரேன்; எவர் தடைசெய்தாலும் யான் இங்கு வந்து என்னாலியன்ற உதவியைச் செய்தல் தடைபடாது. நாங்கள் உங்களுக்குப் பயன்படாப் பதர்களாயிருந்தாலும், நயினாரும் இவர் தம் தந்தையாரும் உங்களுக்கு உற்ற நேரத்தில் உதவி புரியும்படி எல்லாம் வல்ல இறைவனே இவர்களை ஏவியிருக்கின்றான்.

நயினார் : செந்தமிழ்ப் புலவர் திலகமாய் விளங்கிய புகழேந்தியார்தங் குடும்பத்தார்க்கு இடர்ப்பட்ட நேரத் தில் ஏதோ சிறிதுதவி செய்யும் பேற்றை எமக்களித்த

வி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/187&oldid=1580789" இலிருந்து மீள்விக்கப்பட்டது