உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

153

நயினார் : தங்கம் ஒருத்தியைத் தவிர அவர்கட்கு வேறு பிள்ளை கிடையாது. என் தந்தையாரும் புகழேந்தியாரும் மிக நெருங்கிய நண்பர்கள்; அதனால் என் தந்தையாரும் அவரது கட்டளைப்படியானும் இவர்கட்குத் துணையாயிருந்து வேண்டிய உதவிகளைச் செய்து வருகின்றோம். புகழேந்தி யார்க்குப் பாண்டிய மன்னனும் நம்மரசி அங்கயற் கண்ணியாருந் திரண்ட பொருள் கொடுத்திருப்பதால், இவர்கட்கு வறுமை யில்லை. ஏவலர்கட்குங் குறைவில்லை; அரங்கம்மாள் நோயால் வருந்துவதும், எல்லா நலனும் வாய்ந்த தம் ஒரே மகளுக்கு ஏற்ற மணவாளன் வாயாதிருத்தலால் அவ்வம்மையார் கவலைநோய் கொண்டு மேலுமேலுந் துன்புறுவதுமே இவ்வில்லம் பொலிவிழந்து காணப்படு வதற்குக் காரணம்.

அம்பிகாபதி : இவர்களின் துணையற்ற நிலைமையை நினைக்கையில் என்போன்றவர்களின் கன்னெஞ்சமும் கரையாதிராது! இத்தகையவர்கட் கிரங்கி யுதவிபுரியும் நுங்கட்கு உலகின்கட் செய்யக்கூடிய கைமாறு ஒன்றுண்டோ? "அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு மல்லன்மா ஞாலங் கரி,’

66

என்று பொய்யாமொழியார் புகன்ற வண்ணம்நுங்கட் கேதுமே துன்பம் அணுகாது.(இவ்வாறு பேசிக் கொண்டே இருவரும் அவ்வீட்டினுள் நுழைகின்றனர். உடனே ஏவலர் அறிவிக்கத் தங்கம் வருகின்றாள்)

தங்கம்: (இருவரையும் வணங்கி) அண்ணால் வரல் வேண்டும்! வரல் வேண்டும்!

நயினார்: அன்னையார் எவ்வாறிருக்கின்றார்கள்?

தங்கம்: முன்னிலையிலேயேதான் இருக்கின்றார்கள்.

உள்ளே வந்து பாருங்கள்!

(இருவரும் அரங்கம்மாள் படுக்கையறையுட் புக)

அரங்கம்மாள் (படுக்கையிற் கிடந்தபடியே) அப்பா பிள்ளை! எங்கோ நாலைந்து நாளாய்

நயினார்

நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/186&oldid=1580788" இலிருந்து மீள்விக்கப்பட்டது