உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152

நான்காம் நிகழ்ச்சி : எட்டாங்காட்சி

களம் : புகழேந்திப் புலவர் மாளிகை

காலம் : மாலை

அம்பிகாபதி : நயினார்! பத்தாண்டுகளுக்குமுன் யான் சிறுவனாயிருந்தபோது இவ்வீடு எவ்வளவு களையா யிருந்தது? புகழேந்தியார் மாய்ந்த பின்னோ இவ்வீடும் உயிரிழந்த ஓருடம்புபோல் ஒளிமழுங்கிக் காணப்படுகின்றது. (உற்றுக் கேட்டு) ஓ! இவ்வீட்டினுள் யாரோ நோயாய்க் கிடப்பதுபோற் றோன்றுகின்றதே!

நயினார் : ஆம் அம்பிகாபதி, இவ்வீட்டைப்பற்றிய செய்தி ஏதும் நீ அறியாய் போலும்!

அம்பிகாபதி : ஒட்டக்கூத்தருக்குப் புகழேந்தியார்மேற் கடும்பகை. நம் சோழமன்னர் கூத்தரை ஆசிரியராய்க் கொண்டு அவர் சொல்வழி நடப்பவராதலால், அவர் புகழேந்தியாரைப் பாராட்ட வேண்டுமளவுக்குப் பாராட்ட வில்லை. நம்மரசியாரின் துணையினாலேயே புகழேந்தியார் நம்மரசவையிலிருந்து காலங்கழித்தனர். என் தந்தையாரும் புகழேந்தியாரும் உள்ளன்புமிக்க நண்பர்களாயினுங், கூத்தருக்கும் அரசனுக்கும் அஞ்சித் தமது நேயமிகுதியை இருவரும் வெளிக்காட்டுவதில்லை. அதனாலேயே தான் யான் இவ்வீட்டுக்குத் தொடர்ந்து வராமற் றடை செய்யப்பட்டேன். நயினார் : உண்மைதான்.புகழேந்தியார் இறந்தபின் அவர் மனைவியார் அரங்கம்மாள் நோயாற்

தம்

இருமல்

படுக்கையிலேயே பெரும்பாலுங் கிடக்கின்றார்!

அம்பிகாபதி : ஐயோ! அங்ஙனமாயின் அவர் தம் மகள்

தங்கத்திற்கு யார் துணை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/185&oldid=1580787" இலிருந்து மீள்விக்கப்பட்டது