உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

159

சிலரின் குணநலங் கலைநலங்களும், கவர்ச்சிக் குறிப்புக்கள் சிலவுமே காதலை மூளச்செய்வன. மேலும், ஒத்த உள்ளமும், ஒத்த அன்பும், ஒத்த அறிவும், ஒத்த நலங்களுமே மகளிர் ஆடவர்க்குட் காதலை எழுப்புவனவாகும். அதுவல்லாமலும், ஓராண்மகனும் ஒரு பெண் மகளுந் தம்முட் காதல் கொள்ளப் பெற்றாற் பின்னர் அவர் பிறரை நச்சுவார் அல்லர். ஆதலினாற்றான், யான் அமராவதிமேற் காதல் கொண்டபின் தங்கத்தின்மேற் காதல் கொள்ள மாட்டாதோன் ஆயினேன்.

நயினார் : நல்லது, இந்நிலை எனக்கும் உளதேதான். இப்போது இரவு பத்து நாழிகைக்குமேல் ஆய்விட்டது! நின் தங்கையுந் தந்தையாரும் நீ இன்னும் ஏன் வரவில்லையே யென்று கவன்று கொண்டிருப்பர். ஆகையால் நின் இல்லஞ்

செல்வோம் வா.

இருவரும் கம்பர் மாளிகை வாயிலை அணுகியதும்)

ந யினார்: அம்பிகாபதி, என் தந்தையாரும் என்னை எதிர்பார்த்துக்கொண்டிருப்பர். யானும் என் ல்லஞ் செல்கின்றேன். வேறு தக்க வழி பிறக்கும் வரையில் நீ அமராவதிபாற் செல்லுதலை நினையாதே! காளிகோயிற் பக்கத்திற் காவலர் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்!

அம்பிகாபதி : (நயினார் கையை அன்புடன் எடுத்து) என்னாருயிர்த் துணைவ! தீவினையேனான என்பொருட்டு க்கடுங் குளிர்கால இரவிலும் எனக்குத் துணையாய் என்

ன் போந்து துன்புறுகின்றனை. நீ எங்கள் ஏவலனுடன் செவ்வனே வீடு செல். நாளை நாம் பார்ப்போம். நின் சொற்படி நடக்கத் தவறேன்.

நயினார் : நின் தங்கைக்கு என் அன்பையும் நின் தந்தையார்க்கு என் வணக்கத்தையும் வணக்கத்தையும் தெரிவி. (போய் விடுகின்றான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/192&oldid=1580826" இலிருந்து மீள்விக்கப்பட்டது