உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160

நான்காம் நிகழ்ச்சி : ஒன்பதாங் காட்சி

களம் : சோழன் மாளிகை

காலம்: மாலை

சோழன்: (தனக்குள்): தோட்டக்காரன் அம்பிகா பதியைக் கள்வனெக் கொணர்ந்து என் முன்னே நிறுத் தினன். அமைச்சர் நம்பிப்பிள்ளையோ ஆராய்ந்து பார்த்துப் பூக்களைக் களவு செய்தவன் அம்பகாபதி அல்லன் என முடிவு செய்தனர். அதன்மேல் யானும் அம்பிகாபதியை விடுதலை செய்தேன். இது நிகழ்ந்த பிறகு பூக்கள் களவு போகக் காணோம். பூக்களைக் களவு செய்பவன் வேறோரு வனாயிருந்தால், அவன் இதுகாறும் பிடிபடாமையால், மேலுமேலும் பூக்கள் களவு போகவேண்டுமன்றோ! ஆகையாற், கூத்தர் குறிப்பிட்டபடி அம்பிகாபதிமேல் எனக்கு ஐயம் மிகுதிப்படுகின்றது! இதைப் பற்றி மீண்டும் யான் கூத்தரைக் கலக்க வேண்டும். (வெளியே) ஏ கடம்பா! நீ ஆசிரியர் கூத்தரிடஞ் சென்று அவரை உடனே இங்கழைத்து வா!

கடம்பன் : மன்னர் பெருமான் கட்டளைப்படியே (வணங்கிப் போய்விடுகிறான்)

சோழன் : (தனக்குள்) இதைப்பற்றிக் கூத்தரைக் கலப்பதிலும் ஒரு தொல்லையிருக்கின்றது! கூத்தரோ கம்பர் மேலும் அம்பிகாபதி மேலும் நிரம்பிய அழுக்காறுடையவர்; தறுகண்ணர். குற்றமில்லாத அம்பிகாபதி மேற் பெருங் குற்றத்தைச் சுமத்திவிடுவாரானால் அவரது சொல்லை நம்பிக் கல்விவல்ல அம்பிகாபதியை யான் ஒறுப்பது எனக்குப் பெரும் பழியை விளைக்குமன்றோ? எதற்கும் அவரது கருத்து யாதென்று பார்ப்போம்.

(கடம்பன் ஒட்டக்கூத்தருடன் வருகின்றான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/193&oldid=1580835" இலிருந்து மீள்விக்கப்பட்டது