உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162

மறைமலையம் 12

முன்நேரே பார்த்தறிந்த குறிப்புச் சிறிதுமே இல்லை. அது கண்டு முதலில் மிக மகிழ்ந்தோம்.

கூத்தர் : ஓ! முதலில் மகிழ்ந்த மகிழ்ச்சி பின்னர் மாறி விட்டதா?

அரசன் : ஆம்; பெருமானே! அமராவதி ஆடிப்பாடுவதைக் கண்ட அம்பிகாபதி அவள்மேல் அடங்காக் காதல் கொண்ட குறிப்புப் புலனாயிற்று; அங்ஙனமே அவளும் அவனைக் கண்டபின் அவன்மேற் கரைகடந்த காதல் கொண்டவளாய்க் காணப்பட்டு ஆடல் பாடல்களிற்றடுமாறினாள். அவ் விருவரையும் அங்கே நேர் காணுமாறு யான் செய்தமைக்குக் கழிவிரக்கமும் அங்ஙனம் யான் செய்யினும் என் புதல்விமேற் காதல்கொள்ளுந் தகுதிவாயாத அம்பிகாபதி அவளை விழைந்தமைக்குச் சினமும் கொண்டு அந்நாடகத்தை நிறுத்தி

விட்டேன்.

கூத்தர் : நன்று. நீயோ வேந்தர் பெருமானாய் விளங்கு கின்றனை. நின்னருந் தவப் புதல்வி அமராவதியைப் பற்றி பிழைபட நினைத்தலே ஆகாது. அம்பிகாபதியுங் கல்வியறிவில் மிகச் சிறந்தவன்; என் நண்பர் கம்பர்க்கு மகன்; ஆனால், ஒன்று; அவன் துடுக்கன்; நெஞ்சழுத்தம் வாய்ந்தவன். இரு பக்கத்தீரும் எனக்கு நெருங்கிய கேண்மையுடையீராதலில், யான் எவரைப் பற்றி எதுதான் சொல்லக்கூடும்?

அரசன் : பெருமானே! நான் கொண்ட ஐயத்தைத் தீர்த்துக் கொள்ளுதற்குத்தானே புலமையிற் சிறந்த தங்கள் கருத்தை வினவினேன். தாங்கள் இங்ஙனம் நெகிழ்ந்து பேசினால் யான் உண்மை காண்பது யாங்ஙனம்?

கூத்தர் : நல்லது யான் இதில் ஏதுந் தீர்த்துச் சொல்ல இயலாது. நீயே இதனை நன்காய்ந்து பார்த்து உண்மையைக் கண்டறிதல் வேண்டும். ஆயினும் ஒன்று; பூக்கள் திருடிய கள்வனைக் குறித்துத் தோட்டக்காரன் ஏதோ ஒன்று சால்லத் தொடங்கியபோது, அவன்றன் மனைவி அவன் அது சொல்லாமற் றடை செய்து, தான் வெறொன்று சொல்லினள் என்றனையே. அது கொண்டு தோட்டக் காரனும் அவன்றன் மனைவியும் இதிலுள்ள மறைவினைத் தெரிந்தவராகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/195&oldid=1580852" இலிருந்து மீள்விக்கப்பட்டது