உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அம்பிகாபதி அமராவதி

163

காணப்படுகின்றனர். அவர்கள் இரவிற் பேசிக்கொள்வதைக் கேட்டறிந்தால், இதனுண்மை வெளிப்படக் கூடுமெனக் கருதுகின்றேன். இதற்குமேல் வேறெதுவும் என்னறிவிற் றென்படவில்லை.

அரசன் : இது சொன்னதே போதும். உண்மையைக் காண வழி தெரிந்துகொண்டேன். பின் நிகழ்ச்சிகளைப் பின்னர்த் தெரிவிப்பேன். இனித் தாங்கள் இல்லஞ் செல்லலாம். (வணங்கக், கூத்தர் போய்விடுகின்றார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/196&oldid=1580860" இலிருந்து மீள்விக்கப்பட்டது