உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164

நான்காம் நிகழ்ச்சி : பத்தாம் காட்சி

களம் : புகழேந்திப் புலவர் மாளிகை

காலம் : சாயங்காலம்

அம்பிகாபதி : (தனக்குள்)

அமராவதியைக் காணாமல் அடியேனுள்ளம் அகம்புழுங்கிக் கமராய் வெடிக்க உயிர்மாளுங் காலம் அண்மிற்றெனக் கவலேன் தமர்வே றின்றித் தனியாளாய்த் தானும் இறக்குந் தகை நினைந்தே நமனெம் முயரைப் பிரியாமல் ஒருங்கே கவர நயக்கு வெனே.

ஆ! அமராவதி! நின் பொன்வடிவைக் காணாமலும், நின் இன்மொழிகளைக் கேளாமலும், நின் பவளவாய் முத்தங் கவராமலும், நின் கொங்கை மருப்பிற் குழையாமலுங் கழியும் இந்நாட்களில் வீணே இவ்வுடற் பொறையைச் சுமந்து துன்புறுகின்றேனே! இத் துன்பத்தினின்று மீளுதற்கு ஒரு மருந்து தாராயோ? ஏதேது! இனி உன்னைக் காணப்பெறேன். நின்னை ஒரு புடையொத்த தங்கத்தைக் கண்டாவது எனது பொறுத்தற்கரிய துன்பத்தை ஆற்றிக் கொள்கின்றேன். தன் தந்தையை இழந்தும், நோயால் வருந்திக்கிடக்குந் தன் தாயைக் கண்டும், நெஞ்சம் நைந்துவாடி என்போல் துயருறுந் தங்கத்தைக் கண்டால் என் மனம் ஒருவாறு ஆறுதல் அடையும். ஆறாத்துயரில் அமிழ்ந்திக்கிடக்கும் ஒருவர். தம்போல் துயருறும் பிறர் ஒருவரைப் பார்த்து ஆறுதல் கூறுதலால் தமது ஆறாத் துன்பம் ஆறப்பெறுகின்றனர். மேலுந், தக்க துணை யின்றிக் கலங்கி நிற்கும் ஓர் அழகிய இளமங்கையின் நிலை, ஆற்றருந் துன்பத்தால் அலைவுறும் எத்தகைய 6 வருள்ளத்தையும் இளகச்செய்து அவருக்குள்ள துன்பத்தைத் துடையாதிராது.

.

ஆட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/197&oldid=1580868" இலிருந்து மீள்விக்கப்பட்டது