உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

மறைமலையம் 12

அழைத்துச் சென்று நமது பூங்காவில் அமர்வித்துச் சிற்றுண்டி அருத்தி அழைத்து வா.

இருவரும் அம் மாளிகையின்

தோட்டத்திற்குச் செல்கின்றனர்)

பின்னுள்ள பூந்

தங்கம் : அத்தான், அதோ அந்த நாரத்த மரத்தின் கீழுள்ள சலவைக்கல் மனைமேல் அமருங்கள்! சிறிது நேரத்தில் யான் சிற்றுண்டியும் பருகுநீருங் கொண்டு வருகின்றேன்.

அம்பிகாபதி : தங்கம், அவ்வளவு வருத்தம் எடுத்துக் கொள்ள வேண்டாம். அத்தையார் சொல்லுக்குக் குறுக்குச் சொல்லப்படா தென்று சிற்றுண்டி அருந்துபவன் போல் வந்தேன். உண்மையில் எனக்குள்ள வாட்டத்தின் காரணம் வேறு. உணவின்மேல் எனக்குச் சிறிதுமே தேட்டம் இல்லை. உன்னைக் கண்டு உன்னையும் அத்தையாரையும் மகிழ்விப் பதற்கும், அவ்வாற்றால் எனது மனநோயைத் தணித்துக் கொள்ளுதற்குமே இங்கு வந்தேன்.

தங்கம் : அத்தான், உங்கள் இன்சொற்களால் எனது கவலையே தீர்ந்துவிட்டது. நீங்கள் சிற்றுண்டி அருந்தா விட்டாலும், மிக இனிய செவ்வாழைக் கனியும் ஆவின் பாலும் அருந்தலாமன்றோ? அதற்குந் தடை சொல்லாதீர்கள்! (அவை

கொணரப் போகிறாள்)

அம்பிகாபதி : (தனக்குள்) ஆ! பேரழகு வாய்ந்த இம் மங்கையின் அன்பு என்னுள்ளத்தை எவ்வளவு குளிரச் செய்கின்றது! இவளது எழில் வடிவு என் அமராவதியின் அளவிலா வனப்பை என் அகக்கண்ணெதிரே எவ்வளவு தெளிவாய்க் கொணர்ந்து காட்டுகின்றது! இஃதெனக்கு ஒரு பேர் ஆறுதலே! அழகிய உருவைக் காண்பதிலேயே ஒரு பேரின்ப அமிழ்தம் உள்ளத்தூறி வழிகின்ற தெனின், அவ் வுருவம் உயிரோடுலவி அன்பாம் இன்ப மழையையும் ஒருங்கே பொழிந்திடுமாயின் அதனை ஏற்கும் என் போன்ற ஓருயிரின் நெஞ்சம் எத்தகைய பேரின்பத்தில் தேக்கும்! அமராவதியோடு அளவளாய் யான்துய்த்த இன்பப் பெருக்கு இவளது அன்பின் றொடர்பாக என்னுள்ளத் தடத்தே தேங்கிப் பெருகுகின்றது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/199&oldid=1580885" இலிருந்து மீள்விக்கப்பட்டது