உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

167

தங்கம் : (திரும்பி வந்து) அத்தான். இத் தாம்பாளத்தி லுள்ள வாழைப் பழத்தை அவ்வெள்ளிக் கிண்ணத்துள்ள தேனிற் றோய்த் தருந்துங்கள்!

(அவ்வாறே அவன் அருந்த வேறொரு வெள்ளிக் கிண்ணத்துள்ள ஆவின் பாலை அவளெடுத்து, அவன் பருகக் கொடுக்க நெருங்குகின்றாள்.)

அம்பிகாபதி : (பாற்கிண்ணத்தைத் தன் கையில் வாங்க முயன்று) தங்கம், நீயோ களங்கமற்ற நெஞ்சமுள்ள கன்னிப் பண். யானோ ஓர் இளைஞன். நீ சிறிது எட்டியிருந்து இவற்றைத் தருதலே வாய்வது. நீ என்னுடன் மிக நெருங்கி அளவளாவுதலை நின் பணிப்பெண்கள் பார்ப்பராயின் நின்மேற் பழிச் சொற்களைப்பரப்புவரென அஞ்சுகின்றேன்.

தங்கம் : அத்தான், அது குறித்து நீங்கள் சிறுதும் அஞ்ச வேண்டுவதில்லை. என் அன்னையார் என்னை உங்களுக்குத் தான் மணஞ் செய்து கொடுக்கப்போவதாக இங்குள்ள ஏவலர் களுக்கும், அண்ணன் நயினார் பிள்ளைக்குஞ் சொல்லி வருகின்றார்கள்; அது கேட்டு எல்லாரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தவர்களாயிருக்கின்றார்கள். எனது மகிழ்ச்சிக்கும்

அதுவே காரணம்.

அம்பிகாபதி: (நெஞ்சங் கலங்கி) அருமைத் தங்கம். நீ களங்கமில்லா நெஞ்சத்துடன் சொல்வது கேட்டு என் உள்ளம் ஒரு பால் உவந்தாலும், நின்னை மணந்து கொள்ளத் தவஞ் செய்திலேனே என்று மற்றொருபால் அது மிகக் கவல்கின்றது!

தங்கம் : (துடிதுடித்து) என்ன சொன்னீர்கள்! அத்தான், என்ன சொன்னீர்கள்! என்னை நீங்கள் மணக்க விரும்பா விட்டால் இப்போதே என்னுயிர் போய்விடும். உங்களைத் தவிர வேறோர் ஆடவனை மணக்கக் கனவிலும் நினையேன். உங்கள் தீர்மானத்தை இப்போதே தெரிவித்து விடுங்கள்! தெரிவித்து விடுங்கள்!

அம்பிகாபதி : (சிறிது நேரம் சும்மா இருந்து) தங்கம், பதறாதே! நீயோ உலகியலறியாச் சிறுபெண். இப்போதுள்ள என் மனநிலையினை உனக்குச் சொல்லுதலும் நன்றாகாது. நாளடை வில் என்னுள்ளத்துள்ளது உனக்கு விளங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/200&oldid=1580893" இலிருந்து மீள்விக்கப்பட்டது