உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168

மறைமலையம் 12

விடும்.அதற்குள் நீ ஒன்றுந் துணிந்து செய்யாதே! நீ உயிர் விடுதலைக் காண என் நெஞ்சந் தாங்குமா?

தங்கம் : அத்தான், நீங்கள் பின் சொன்னது என் னுயிருக்கு ஓர் ஆறுதல் அளித்தாலும், முன் சொன்னது மூடு பொருளாயிருத்தலால், அஃதென்னுயிரை வாட்டுகின்றதே! நீங்கள் என்னை மணந்து கொள்வதில் தடையாதுள்ளது? யான் உங்கள் கண்ணுக்கு அழகுடையவளாய் இல்லையா? கல்வியில் உங்களுக்கு மற்றைப் பெண்பாலார்க்குச் சிறிதுங் குறைந்தவள் அல்லேனே! உங்கள் உள்ளத் துள்ளதைத் திறந்து சொல்லுங்களே.

யான்

குறைந்தவளாயினும்,

னாக

அம்பிகாபதி : தங்கம், உன்னை அழகில்லாதவள் என்று சொல்லத் துணிபவன், காதுங் கேளாத பிறவிக் குரு வன்றோ இருத்தல் வேண்டும். உன்னைப் பார்த்தவரும் உன்னழகைப் பற்றிக் கேட்டவரும் உன்னை எவ்வளவு புகழ்ந்து பேசுகின்றார்களென்பதை யான் நன்கறிவேன். அஃதிருக்கட்டும். என் வாழ்நாளில் யான் கண்ட அழகிற் சிறந்த மங்கையர் மூவர்.

தங்கம் : (பரபரப்புடன்) அம் மூவரும் யார்?

அம்பிகாபதி : அருமைத் தங்கம், நீ ஒருத்தி, என் தங்கை காவேரி ஒருத்தி, பின் நம் சோழ மன்னன் மகள் அமராவதி ஒருத்தி இம் மூவரது அழகுக்கு ஒப்பாகவோ உயர்வாகவோ கருதக் கூடிய வேறோரு பெண்ணை இதுகாறும் யான் எங்குங் கண்டிலேன்.

தங்கம் : (மகிழ்ந்து) அஃதிருக்கட்டும். கல்வியில் யான் எந்த மங்கையர்க் கேனுங் குறைந்தவளா?

அம்பிகாபதி : இல்லை, இல்லை. நல்லிசைப் புலமை மலிந்த புகழேந்திப் புலவர்க்குப் புதல்வியாய்ப் பிறந்து, அவரால் முத்தமிழும் பயிற்றப்பட்ட நீ, மற்றைய மாதர்க்கு அப்பயிற்சியிற் குறைந்தவளாதல் யாங்ஙனம்?

வு

தங்கம் : அத்தான், இவ்வளவு நீங்கள் இந்த ஏழையை உயர்த்துப் பேசியதற்கு இவள் யாது கைம்மாறு செய்ய வல்லாள். உங்களை மணக்கும்பேறு பெறுவேனேல் உங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/201&oldid=1580902" இலிருந்து மீள்விக்கப்பட்டது