உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

169

உள்ளம் உவக்க நீங்கள் வேண்டிய பணி புரிதலையே விழைதல் செய்வேன். அஃதிருக்கட்டும். காவேரியோ உங்கள் தங்கை; யானோ உங்கள் அத்தை மகள்; எங்களிருவரையும் நீங்கள் காண்பது போல, நம் மன்னர் பெருமான்றன் அருந்தவப் புதல்வியான அமராவதி கன்னிப் பெண்ணாதலாற் புறத்துள்ள ஆடவரெவரும் அவளைப் பார்த்தல் இயலாதே.

அம்பிகாபதி : அது மெய்தான். ஆனாலும், என் தந்தையார் தாம் பாடிய இராமாயணத்தைத் திருவரங்கத் திருமாலடியார் குழுவில் அரங்கேற்றச் சென்றபோது யான் அமராவதிக்குப் பாடஞ் சொல்லும் ஆசிரியனாக அரசனால் அமர்த்தப் பட்டேன். ன். அதனால், அவளைக் கண்களாற் காணவும், அவளோடு உரையாடவும் பெற்றேன்.

டு

தங்கம் : ஆ! இப்போதுங்கள் மனநிலையினை நன் கறிந்தேன். உங்கள் தந்தையார் திரும்பி வந்த பிறகு நீங்கள் இளவரசிக்குப்பாடஞ் சொல்லும் வாய்ப்பு உங்களை விட்டு நீங்கியது போலும்! அதனாலேதான் உங்களுக்கு இவ்வளவு மனவாட்டம் என்றாலும், நீங்கள் இளவரசிக்குப் பா பாடஞ் சொல்லாமல் இப்போது நிறுத்தப்பட்டது ஒரு பெரு நன் மைக்கே. அரசரோடு உறவாடுவது நெருப்போடு உறவாடு தலையே ஒக்கும். கல்வியும் பேரறிவும் வாய்ந்த உங்களுக்கு அவ்விரண்டிலுஞ் சிறியவளாகிய யான் யாது சொல்வேன்?

அம்பிகாபதி : அருமைத் தங்கம், நீ ஆண்டிற் சிறியவளே யல்லாமல் அறிவிற் பெரியவளாகவே யிருக்கின்றாய். நீ கூறிய அறிவுரை என்றும் என் நினைவை விட்டு அகலாது. யான் ளவரசிக்குப் பாடஞ் சொல்லாமல் நிறுத்தப்பட்டது ஒரு பெரு நன்மைக்கே என்று என் தங்கை காவேரியும் நின்னைப் போலவே சொல்கின்றாள். யான் நிறுத்தப்பட்ட பின்னர் நம் அரசர் பெருமான் விருப்பப்படி காவேரியும் இளவரசியும் ஒருங்கிருந்து முத்தமிழ்ப் பயிற்சி செய்கின்றனர்.

தங்கம் : அங்ஙனமாயின், காவேரி இளவரசியின் கன்னி மாடத்திலேயே இருக்கின்றனளோ? யானுங் காவேரியுடன் கூடித் தமிழ் பயில விழைகின்றேன். ஆனால், அஃதெனக்குக் கிட்டாது போலும்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/202&oldid=1580910" இலிருந்து மீள்விக்கப்பட்டது