உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170

மறைமலையம் 12

அம்பிகாபதி: அங்ஙனமன்று; காவேரி இடையிடையே தன்னில்லத்திற்குச் சென்று தங்கி வர விரும்பினால் அவ்வாறே செய்யலாமென்று அரசனாலும் அமராவதி யினாலும் விடையளிக்கப் பெற்றிருக்கின்றாள். அதனால், அவள் எமது இல்லத்திற்கு இடையிடையே போந்து தங்கிப் போவதுண்டு. அங்ஙனம் வரும் நாட்களில் அவளை நின்பால் வந்து அளவளாவச் செய்விக்கின்றேன்.

தங்கம் : அத்தான், காவேரி வரும் நாளைத் தெரிவி யுங்கள்; யானே நுங்கள் மாளிகைக்குப்போந்து காவேரியைக் காண்பேன்.

அம்பிகாபதி : நீ வரலாகாது தங்கம். நின் அன்னையார் நோயாயிருத்தலால், ஒரு நொடிப் பொழுதும் நீ அவர்களை விட்டு வரலாகாது; மேலும், இவ்வீட்டில் ஆண்துணையு மில்லை, ஆகையால், யானே என் தங்கையை நின்பால் யான் அழைத்து வருகின்றேன்.

தங்கம் : அத்தான், உங்களன்பிற்கும் இரக்கத்திற்கும் அளவேயில்லை; அவ்வன்பையும் இரக்கத்தையும் முற்றும் பெற தவஞ்செய்துளேனோ? காவேரியை எப்போது

யான்

காண்பேன்?

வி

அம்பிகாபதி: மிகு விரைவிற் காண்பாய்! அமைதியாய் உள்ளம் உவந்து இரு! யான் அத்தையார் பால் விடை பெற்றுச் சென்று வருகின்றேன்.(அவள் வணங்கப் போய் விடுகின்றான்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/203&oldid=1580918" இலிருந்து மீள்விக்கப்பட்டது