உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

171

நான்காம் நிகழ்ச்சி : பதினோராங் காட்சி

களம் : அமராவதியின் கன்னிமாடம்

காலம் : முன்னிரவு.

அமராவதி : (தன் உயிர்த் தோழியை நோக்கி) என்னடி நீலம், காவேரி நாலைந்து நாட்களாய் நம்மிடம் வர வில்லையே!

நீலம் : நின் கணவர் புகழேந்திப் புலவரில்லத்துக்கு அடுத்தடுத்துப் போய்வருதலைக் காவேரி தெரிவிக்கத் தெரிந்தேன்.

அமராவதி : யான் கேட்டதற்கு இதுதானா விடை? என் கணவர் எதற்காக அங்கே செல்கின்றார். புகழேந்திப் புலவர் காலமானபின் அங்கே ஆண்பாலார் எவருமே யில்லை யென்றும், அவர் தம் மனைவியாரும் அவர்தம் ஒரே மகள் ஒருத்தியும் பணிப்பெண்களுமே அங்குளரென்றும் என் அன்னையார் சொல்லக் கேட்டிருக்கின்றேன்.

நீலம் : அஃதுண்மைதான் அம்மா, புகழேந்தியாரின் மனைவியார் இருமல் நோயால் மிகவுந் துன்புற்றுக் கிடக் கின்றார். அவர்தம் ஒரே மகளான தங்கம் பேரழகு வாய்ந்த இளமங்கை; தாயின் துன்பங்கண்டு கலங்கி நிற்கின்றாள். நம் புலவர் பெருமான் கம்பர் புகழேந்தியார்க்கு ஆருயிர் நண்பர். அதனால், அவர்தம் அருமைப் புதல்வரான அம்பிகாபதியார் துணையற்ற அவ்விருவர்க்கும் வேண்டும். உதவிகள் செய்ய வும், ஆறுதல் சொல்லவுமே அடுத்தடுத்து அங்கே சென்று வ ருகின்றனராம்; சென்ற நாலைந்து நாட்களாகத் தன் தங்கை காவேரியையும் அங்கே அழைத்துச் சென்று அவர்களுக்குத் துணையாகத் தங்க வைத்திருக்கின்றனராம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/204&oldid=1580927" இலிருந்து மீள்விக்கப்பட்டது