உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

L

172

·

மறைமலையம் 12

அமராவதி : ஐயோ! பாவம்! புகழேந்தியார் எங்கள் பாட்டனார் பாண்டியவேந்தரது அவைக்களத்தில் மிக்க சிறப்புடன் வீற்றிருந்த நல்லிசைப் புலவர்; நற்குணங்களுக்கு ஓர் உறை விடமானவர்; என் அன்னையார் என் தந்தையாரை மணந்து கொண்டு வந்தஞான்று அவர்க்கு வரிசையாக உடன் விடுக்கப் பட்டவர். இங்கே வந்தபின் ஒட்டக்கூத்தரால் அவரடைந்த துன்பத்திற்கோர் அளவேயில்லையாம். அதனை என் அன்னை யார் அறிந்து என் தந்தையாரைக் கடிந்து கொண்ட பிறகுதான் புகழேந்தியார்க்கு நல்ல காலம் உண்டாயிற்றாம். அது முதல் என் அன்னையார் செய்துவரும் உதவியினாலேயே அவர்கள் வறுமை தீர்ந்து செழுமையாக வாழலாயிற்றாம். ஆனாற், புகழேந்தியார் காலமான பிறகோ அவர்கட்கு ஆண்துணையில்லை. நம் அமைச்சரும் அவர்தம் புதல்வர் நயினார் பிள்ளையுமே அவர்கட்கு வேண்டும் உதவிகளை மனமுவந்து செய்து வருகின்றனராம். அஃதிருக் கட்டும். இத்தனை காலமாகப் புகழேந்தியாரது இல்லத்திற்குச் சல்லாத என் கணவர் சென்ற சில நாட்களாக மட்டும் அங்கே சென்று வருவதற்கு ஏதோ முதன்மையான ஒரு காரணம் இருக்க வேண்டுமென்பது உனக்குத் தோன்றவில்லையா?

நீலம் : ஆம், அம்மா காரணம் இருக்கத்தான் வேண்டும்; காரணம் திட்டமாகவே இருக்கின்றது. நயினாரும் நின் கணவரும் உயிர்த்தோழர்கள். நின்கணவர் நின்பால் வருதலைத் தவிர்த்து, அவரது நினைவை வேறுமுகமாகத் திருப்பல் வேண்டியே அவரை நயினார் அங்கு அழைத்துக் காண்டு போய் அவர்களுடன் பழகச் செய்திருக்கின்றனரெனக் காவேரி சொல்லத் தெரிந்தேன்.

அமராவதி : (முகம்வாடி) நயினாரின் சூழ்ச்சி இப்போது நன்கு விளங்கிவிட்டது! அம்பிகாபதியார் என்பால் வரு தலைத் தெரிந்தால், என் தந்தை அவர்க்கு ஏதம்புரிவ ரென்றஞ்சியே நயினார் அங்ஙனஞ் செய்திருக்கின்றனர். அதுபற்றி அவரை நோவதிற் பயனில்லை. தங்கமோ பேரழகி; மணமாகாத கன்னிப்பெண். அவளையே அம்பிகாபதியார் மணந்துகொண்டு நன்கு வாழட்டும்!

கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/205&oldid=1580935" இலிருந்து மீள்விக்கப்பட்டது