உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

173

தீவினையாட்டியாகிய என்னால் அவரேன் பேரிடருக்கு உள்ளாகவேண்டும்?

(இது சொல்லி அழுதுகொண்டே சோர்ந்து இருக்கை யிற் சாய்ந்து விடுகின்றாள். நீலம் அவளது சோர்வு தீரச் செய்வன செய்கையிற் காவேரி வந்து சேர்கின்றாள்)

க்

காவேரி : கண்மணி அமராவதி, நீ ஏன் சோர்ந்திரு கின்றாய்? யான் வந்திருப்பது உனக்குத் தெரியவில்லையா? கண்விழித்து என்னைப்பார்!

அமராவதி : (கண்விழித்துப்பார்த்து வியந்து மெலிந்த குரலில்) கண்ணே காவேரி, உன்னைச் சென்ற சில நாட்களாகப் பாராத குறையினாலேயே எனக்கு இந்தச் சோர்வு உண்ட யிற்று; இப்போதுன்னைப் பார்த்ததும் அது முற்றுமே என்னைவிட்டு அகன்று போயிற்று. நல்லது, இப்போதுன் தமையனார் உடல்நல மனநலமுடன் இருக்கின்றனரா?

காவேரி : ஆம் கண்மணி! அவர் உன்னையே இரவும் பகலும் நினைந்துகொண்டிருத்தலால் அவர் ஆண் உருவம் மாறி உன்னைப்போற் பெண் உருவமாய்விட்டார்! எவர் எதனையே எண்ணிக்கொண்டிருக்கின்றனரோ, அவர் அதனைப் போலவே உருமாறுதலடைவரென நம் அறிவு நூல்கள் அறைவது அரியதோர் உண்மையாய்க் காணப்படுகின்றது!

அமராவதி : அரு மக்கண்ணே! நீ கூறுவது உண் மையோ? விளை ளையாட்டோ? எனக்கொன்றும் விளங்க வில்லையே!

காவேரி : இல்லை, கண்மணி! அவர் உண்மையாகவே பெண்ணுருவிற்றான் இருக்கின்றார்!

இனி

அமராவதி: (ஐயுற்று) அங்ஙனமாயின் இதுகாறும் எனக்கு மைத்துனனாயிருந்தவர் எனக்கு மைத்துனியாய் விட்டனரோ; அஃதிருக்கட்டும். காவேரி இதற்கு முன்னெல்லாம் நீ என்னுடன் உரையாடி வந்தபோது வழங்கிய சொன்முறையும், இப்போது நீ வழங்குஞ் சொன் முறையும் வேறாய்த் தோன்றுகின்றனவே! உன் குரலொலியும் ஒரு சிறிது வேறாய்த் தோன்றுகின்றதே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/206&oldid=1580944" இலிருந்து மீள்விக்கப்பட்டது