உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174

மறைமலையம் -12

காவேரி : (புன்சிரிப்புக்கொண்டு) ஆம் என் ஆருயிரே, ஆண் பெண்ணாகவும் பெண் ஆணாகவும் மாறினாலும், ஆண்குரல் பெண்குரலாகவும், பெண் குரல் ஆண்குரலாகவும் மாறுவது அருமையே.

அமராவதி : அங்ஙனமாயின், நீயும் நின்தமையனைப் போல் முன்னமே ஆணாயிருந்து பின்னே பெண்ணாக மாறி

விட்டனையோ!

காவேரி : ஆமாம், கண்மணி; திரும்பவும் நீ விரும்பி னால் முன்னுள்ள என் ஆணுருவினைக் காட்டுகிறேன்.

அமராவதி : : கண்ணே காவேரி, நீயோ சொல்லி முடியாப்பேரழகி; அதனால், நின் முன்னை ஆண்வடிவம் பேரழகு வாய்ந்து துலங்குவதாகவேயிருக்க வேண்டும். ஆனாலும், என் காதலர் அம்பிகாபதியாரின் பேரழகு வாய்ந்த ஆண்வடிவைக் கண்ட என் கண்களால் வேறோர் அழகிய ஆடவர் வடிவைக்காண என் உள்ளம் இசையாதே.

காவேரி : ஆனால், அது நன்றுதான். நான் காட்டுவது நின் காதலரின் உண்மையுருவாய் இருக்குமேல்

(தோழி நீலம் சிரித்துக் கொண்டு போய் விடுகின்றாள்) அமராவதி : ஓ! அதனை யான் கட்டித் தழுவி முத்த

மிடுவேன்.

(உடனே காவேரியின் பெண்ணுடையிலிருந்த கோலத்தைவிட்டு அம்பிகாபதி ஆணுடையிற் றோன்றுகின்றான்)

ஓ! நீர் என் ஆருயிர்க் காதலர் அம்பிகாபதியார்தாம். தமையனுந் தங்கையும் ஒரே வடிவினராக இருத்தலால், இங்ஙனம் என்னை ஏமாற்றலாயினர்.

இக்கன்னி

அம்பிகாபதி : உன் தோழியைத் தவிர மாடத்திலுள்ளார் அனைவரையுமே யான் ஏமாற்றி

விட்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/207&oldid=1580952" இலிருந்து மீள்விக்கப்பட்டது