உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

175

அமராவதி : என் தமையனும் யானும் உங்களைப் போலவே ஒரேவடிவினமாகப் பிறந்தோ மில்லையே! அங்ஙனம் வாய்த் திருந்தால் உங்களையும் இந்த அரண்மனையிலுள்ளார் அனைவரையுமே யானும் ஏமாற்றியிருப்பேன். ( இது சொல்கையில் அம்பிகாபதி அவளைத் தழுவ நெருங்க) எட்டி நில்லும்! யான் நும் ஆருயிர்த் காதலி தங்கம் அல்லேன்! யான் சோழவேந்தன் புதல்வி அமராவதி, இளவரசி! காதலி மேற்கொண்ட காம மயக்கம் நுங்கண்களைத் தெரியாமல் மறைக்கின்றது போலும்!

அம்பிகாபதி:

மாற்றறியாத் தங்க்ம் நீயிருக்க மனமாழ்கி

வேற்றொருத்தி தங்கத்தை விழைந்திட நான் மாட்டேனால் ஏற்றத்தாழ் வறிபெருமை யுரையாணி எடுத்தகையன

தேற்றமாய் அதிற்குறைந்த செம்பொன்னைத் தேர்குவனோ?

அமராவதி : ஐயோ! தந்தையை இழந்து தாயும் நோயாய்க் கிடந்து வருந்தக் கலங்கி நிற்குந் தங்கத்திற்கு நீங்கள் மண மகனாய் அமைய இசைந்தால் அஃதவள் துன்பமெல்லாஞ் சுவடறத் துடைத்து விடுமே!

அம்பிகாபதி : அஃதுண்மைதான் கண்மணி. ஆனால், தங்கத்தைப் பார்க்கும்போது நின் பொன் வடிவும் நின் சொற் செயல்களுமே என் நினைவுக்கு வருகின்றன வல்லாமல், அவள்மேற் காதல் சிறிதுமே எனக்கு வரவில்லையே!

அமராவதி : அங்ஙனமாயின், துன்புறும் மகளிர்பால் இரக்கஞ் சிறிதுமில்லாக் கன்னெஞ்சமுடைய வன்கண்ணர் நீர்!

அம்பிகாபதி : அற்றன்று, என்னாருயிரே துன்புறும் அன்னார்பால் எனக்கு இரக்கமுண்டு; காதல் இல்லை; என் காதலுக்குரியவள் நீயொருத்தியே.

அமராவதி : அங்ஙனமாயின், தங்கத்தின்பால் இரக்கம்

வைத்து அவளுக்கு என்ன உதவி செய்தீர்கள்?

அம்பிகாபதி : அவள் என்னை மணக்க விழைந்துரைத்த சொல்லுக்கு யான் உடன்படாமை கண்டு தன்னுயிரையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/208&oldid=1580960" இலிருந்து மீள்விக்கப்பட்டது