உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176

❖ LDM MLDMOED -12 →

போக்கிவிடத் துணிந்து பதறினாள்; அது கண்டு யான் பெரிதுங் கலங்கி அவளது நினைவை மெல்ல வேறுமுகமாத் திருப்பி அவளுக்கு ஆறுதலும் மகிழ்ச்சியும் உண்டாம் வண்ணம் என் தங்கையை அவளுடன் அளவளாய் இருக்கச் செய்தேன்.

அமராவதி : அது நன்றே. ஆனாலும், ஒருவர்க்கிரங்கி நன்மை செய்யப்போய் மற்றொருவர்க்குத் துன்பத்தைத் தரலாமோ? உங்களைக் காணாமல் எனக்குண் ண்டான ஆற்றாமையை உங்கள் தங்கையைக் கண்டு ஒருவாறு ஆற்றிக் கொண்டிருந்தேன். அவளையும் என்பால் வராமல் தடை செய்து விட்டால் வேறு யாரைக் கண்டு நான் ஆற்றிக் கொண்டிருப்பேன்?

அம்பிகாபதி : என்னைக் கண்டுதான் நீ ஆற்றிக் கொண் டிருக்க வேண்டும்.

அமராவதி : அதற்குத்தான் யான் அரசன் : யிருப்பது பேரிடையூறாய் இருக்கின்றதே!

மலரின் மணமும் மலரைவிட்டு மறையக் காண்டும் மற்றிந்த உலகின் உயிர்கள் உடலைவிட்டும் ஒழியக் காண்டும்

மகளா

உமைப்பிரிந்தால் நிலமே லிருக்க என்னாவி நிலையா திதற்கோர் நிலைவகுக்கப் புலமே பெரியீர் ஒரு நொடியும் போகா துஞற்றப் புகுதிரால் அம்பிகாபதி:

வடநாட்டிற் பெருந்திறலான் வடுக மன்ன னொருவனுளன் கடனாற்றும் இந்நாட்டுக் காவலனுங் கலக்கமுற

அடலாற்றும் பெருமிடலான் என்றந்தைக் கருநண்பன்

தொடர்நாட்டுந் தொன்னகரே துணையாகத் துணைவருமே.

அமராவதி : பெருமான், நீங்கள் கூறும் மன்னன் யார்? அவரது நகரம் யாது? அங்கே நாம் எப்போது போகக் கூடும்? நுங்கள் தந்தையார்க்கு நண்பரான அம்மன்னர் உங்களுக்கும் நண்பரா? எங்ஙனமாயினும் எவ்விடத்தாயினும் எவராலா யினும் நீங்கள் உயிர் தப்பிப் பிழைத்தாற் போதும். ஆனால் ஒன்று. என்னை விட்டு நீங்கள் மட்டும் எங்கேயுஞ் சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/209&oldid=1580969" இலிருந்து மீள்விக்கப்பட்டது