உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

177

விடாதீர்கள்! நீங்கள் என்னை விட்டுப் போனால், என் உயிரும் என் உடலை விட்டுப் புறப்பட்டு உங்களைப் பின்றொடர்ந்து வரும்!

அம்பிகாபதி : (அவளைக் கட்டியணைத்து முத்தமிட்டு) கண்மணி, என்னாருயிர்க் காதலி, நின்னை யான் பிரிந்து போதல் இம்மையிலும் இல்லை, மறுமையிலும் இல்லை. என் தங்கையையும் உடனழைத்துக் காண்டு வடநாடு செல்வதற்கே என் தந்தையார் ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றார்.

நம்மிருவரையும்

அமராவதி : அங்ஙனமாயின், நம் காதற் சேர்க்கை நுங்கள் தந்தையார்க்கு எங்ஙனந் தெரியும்? அவர் அதனை ஏற்றுக் கொண்டனரா?

அம்பிகாபதி : காதலி, இடையே பலநாட்கள் இங்கே வந்து உன்னைக் காணாமலும் உன்னோடு அளவளாவாமலும் இருக்க நேர்ந்த பெருந்துன்பத்தால், இடையிடையே கனவின் கண் வாய்விட்டு அலறிப் புலம்பலாயினேன். அப்புலம்பலின் ஊடேயூடே நின் பெயருந் தோன்றியது! என்னருகே படுக்கை யிலிருந்த என் தந்தையார் அவையெல்லாங் கேட்டு வெரு கொண்டு என்னை யெழுப்பி, நம் சேர்க்கையின் வரலாறு முற்றும் என்பாற் கேட்டறிந்தார். அது முதல் அவர் என்பால் ஏக்கங் கொண்டவராய், நின்பால் என்னை வராமற்றடை செய்ய எவ்வளவோ சொல்லிப் பார்த்தார்; அஃதொன்றும் பயன் படாமை கண்டு என்னை மட்டும் வட நாட்டுக்கு அழைத்துக்கொண்டு செல்ல மிக முயன்றார். நின்னோடன்றி வடநாடு ஏகயான் ஒரு ஒரு சிறிதும் ஒருப்படாமை கண்டு நின்னையும் உடன் கொண்டு செல்லத் துணிந்து ஏதேதோ சூழ்ச்சி செய்து கொண்டிருக்கிறார். செல்லும் ஊர், அவ்வூரின் வேந்தன் நாம் புறப்படவேண்டிய நாள் முதலியவைகளைப் பற்றிக் கேட்டால், “இப்போதொன்றுங் கேளாதே! தெரிவிக்க வேண்டிய நேரம் வரும்; வருங்கால் எல்லாம் தெரிவிப்பேன்” என்று பகர்கின்றார். எல்லாம் மிக மறைவாக அவர் செய்வதை நோக்கினால், நாம் இங்கிருந்து அகன்றபின் நம்மைப்பற்றி நின் தந்தையார் ஏதுமே தெரிந்து கொள்ளு

று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/210&oldid=1580977" இலிருந்து மீள்விக்கப்பட்டது