உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178

❖ LDM MLDMOED -12

தற்கு வழி தோன்றாவாறு சூழ்கின்றார் என்று கருதுகின்றேன். அரண்மனையில் வாழும் மயிலனைய நின்னை எவ்விடத்தில் வைக்க நேருமோ என என் நெஞ்சங் கவல்கின்றது.

அமராவதி:

நுண்ணறிவு சான்ற அண்ணல் நுந்தந்தை சூழ்ந்து செய்வதில் ஆழ்ந்தபொரு ளுண்டே; கொலைவினை யஞ்சாக் கொடுங்கட் கானவர் வலையகப் படுத்த கலைமான் பிணையிற் பேதை நெஞ்சம் பெருந்துயர் கூர

எல்லும் எல்லியும் அல்லலுற் றிருக்கும் என் இந்நிலை தீரச் செல்லுந் தேஎம் நாடே யாயினும் ஆகுக; அன்றிக் காடே யாயினும் ஆகுக; நாடுங் காடுமன்றி வேடுவ ரொதுங்குங்

கழைவளர் பொருப்பின் முழையே யாயினும் ஆகுக, அதனை ஓரேன்; நாகிளம் பெடைமான் றன்னை நொடியுந் தணவாக் கலைமா னெனவெனைக் கலந்துறை வீரேல் இலையால் அதனின் இனிய தோரிடந் தலைவ! எனக்கென மகிழ்விற் றழைமோ!

அம்பிகாபதி : கண்மணி, அமராவதி, என் ஆருயிர்க்

காதலி!

சித்திரைக் கொடுவெயில் தீய்க்க வந்தவன் முத்தினைக் கரைத்தென முழுகு நீர்நிறை நத்தியல் வாவியும் நறிய தென்றலும்

ஒத்திசைந் தவன்விடாய் ஒழித்த பான்மைபோல், கிளியின் மொழியுங் கிளர்மலரின் செழுநறவும் எளியவாக இசைமிழற்றும் நின்னுரைகள் அளியவிவ் வேழை அலமருநெஞ் சங்குளிரத்

தெளிவு பயந்தமைக்குச் செயும்நன்றி தேரேனால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/211&oldid=1580986" இலிருந்து மீள்விக்கப்பட்டது