உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

179

அமராவதி : பெருமான், பெறுதற்கரிய நுங்களை யான் எளிதிற் பெறுமாறு நீங்கள் பேரிடரினூடு போந்து இந்த ஏழைக்குத் தலையளி செய்து வருதலினும் மிக்கதொரு நன்றி வேறுண்டோ? இனி, நீங்கள் என் மைத்துனியின் உடையில் என்பால் வரத்தெரிந்து கொண்டமையால், இரவும் பகலும் என்னை விட்டுப் பிரியாத பாங்கியாய் நீங்கள் இங்கேயே யிருக்கலாமன்றோ?

அம்பிகாபதி : பிறரெல்லாம் என்னைக் காவேரி யென்றே கருதியிருக்க, நீ மட்டுஞ் சிறிது முன்னே என்மேல் ஐயுற்றனை யன்றோ? நின்போல் நுண்ணறிவு வாய்ந்த நின் தோழிய ரெவரேனும் என் கரந்த உருவினைக் கண்டு கொள்வரேல் அஃதென்னாய் முடியும்! மேலும், பகலி லாயினும் இரவிலாயினும் நெடுநேரம் யான், எம் இல்லத்தில் இல்லாவிட்டால், என் தந்தை என்மேற் சீற்றங் கொள்கின்றார். யான் நின்பால் வந்து செல்வதெல்லாம் என் தந்தையறி யாமலே நடைபெறுகின்றன. இவ்வகையில் நின்தோழி நீலமும் என் தங்கை தங் மிகு

காவேரியும்

பரி

மறைவாகப் தெண்ணிச் செய்யும் உதவி எழுமை எழு பிறப்பும் மறக்கற் பாலதன்று. ஆகையாற், கண்மணி, நேரம் வாய்க்கும் போதெல்லாம் யான் நின்பால் வரத்தவறேன்.

இந்நிலத்தில் இன்பம் இதுபோல்வ துண்டென்ன எந்நினைவின் முன்னே எழுந்ததிலை ஏந்திழையே அந்நிலத்தில் உண்டென்பர் ஆரதனைக் கண்டவரே? வெந்நிலத்தின் வெப்பும் நுனைக்காணின் வீந்திடுமே! அமராவதி :

எளிய னுயிரும் உடலும் எரியாமல்

விளியாத காதல் விரைகமழும் பனிமலர்போல்

நளியாரத் தந்த நன்மதியம் நீரானால்

முளியான புல்லும் முன்போல் முளைத்திடுமே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/212&oldid=1580994" இலிருந்து மீள்விக்கப்பட்டது