உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180

ஐந்தாம் நிகழ்ச்சி : முதற் காட்சி

களம் : அரண்மனைப் பூந்தோட்டத்தருகிலொரு தனியிடம்.

காலம் : மறைநிலாக் காலத்து ஒரு நள்ளிரவு.

சோழ மன்னன் : நம்பிப்பிள்ளை, நிலவு வெளிச்சஞ் சிறிதும் இல்லா இந் நள்ளிரவில் உங்களை ள இங்கே யான் அழைத்துவர நேர்ந்தமைக்கு மிக வருந்துகின்றேன். என் சய்வது! யான் கொண்ட ஐயம் முற்றுந் தீர்ந்தாலன்றி என்னுள்ளம் அமைதி பெறுவதாய் இல்லை!

அமைச்சர் : மன்னர் பெருமானே, இந்நள்ளிரவில் வெளிப்போந்து அலைச்சற் படுக்கையில், தங்களை நிழல் போற் பின்பற்றி வருவதற்குரிய எனது கடமை எனக்கு எப்போதுமே எத்தகைய வருத்தமுந் தருவதன்று.

சோழன் : நமது பூந்தோட்டத்துப் பூக்களைத் திருடி வந்தவனாக அம்பிகாபதியைத் தோட்டக்காரன் பிடித்துக் காணர்ந்து ஆள் மாறாட்டம் ஆமென நீங்கள் முடிவு செய்தது பொருத்தமாயிருந்தாலும், என் மனம் மட்டும் அதனை ஒப்புக் கொள்ளவில்லை. அம்பிகாபதி திருடன் அல்லன் என நாம் அவனை விடுவித்தபின், அந்நாள் முதல் இந்நாள் காறும், நமது பூந்தோட்டத்துப் பூக்கள் களவு போகவில்லை. திருடன் வேறோருவனாயிருந்தால் இது காறும் பிடிபடாதிரான். மேலும், அம்பிகாபதி அந்நாள் நள்ளிரவில் என் புதல்வி அமராவதியின் இளமரக்கா மதில் ஓரமாய்க் காணப்பட்டதும் ஐயுறுதற்கிட மாயிருக்கின்றது. நம் புலவர் பெருமான் ஒட்டக்கூத்தரும் இங்ஙனமே கருதுகின்றனர்.

அமைச்சர் : நல்லது. இப்போது தாங்கள் செய்யக் ருதுவது யாதோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/213&oldid=1581002" இலிருந்து மீள்விக்கப்பட்டது