உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* அம்பிகாபதி அமராவதி

181

சோழன் : இப்போது இத்தோட்டத்தின் டத்தின் உள்ளே நுழைந்து, நமது தோட்டக்காரன் கறுப்பண்ணனும் அவன் மனைவியும் பேசிக் கொள்வதை அருகிருந்து ஒட்டுக்கேட் போமாயின் ஏதாவதுண்மை அதிலிருந்து வெளிப்படக் கூடும். அமைச்சர் : மன்னர் பெருமான் கருதுகிறபடியே

செய்வம்.

(இருவருந் தோட்டத்துள் நுழைந்து தோட்டக் காரனது குடிலோரமாய் ஒளிந்து நிற்கின்றனர்)

வெள்ளைச்சி : என்னங்கிறேன், உனக்கு எள்ளத்தனெ கூட முன்னறிவு இல்லெ. நம்ம தோட்டத்துப் பூவெ பறிச் சிக்கிட்டுப் போனவன் திருடன் அல்ல என்று நான் சொன்னனே, அவன் நம்ம இளைய ராசாத்தி தோட்டத்து மதிற் பக்கமாப் போய்வந்ததெ ராசா கிட்டே சொல்லாதே என்று நான் சொன்னேனே; அதெ காலத்திலே பறக்க விட்டிட்டியே! நீ சொன்னது பெருந்தீங்கா விளைஞ்சு போச்சே!

நீ

கருப்பண்ணன் : அடி கண்ணாட்டி, நீ சொன்னதெ மறந்தல்லோ சொல்லிப்போட்டேன். என்னா தீங்கு வந்துதடி? ராசாவுக்கு என்மேலெ கோவமா?

வெள்ளைச்சி : நீ திருடனென்னு பிடிச்சுக்கிட்டுப் போனவன் நம்ம அரமனெப் பொலவர் கம்பர் அம்பிகாபதியல்லவோ!

மகன்

கருப்பண்ணன் : ஆமா, அப்பிடித்தான் பின்னாலெ தெரிஞ்சுது.நான் சொன்னதிலே ஐயொறவு பட்டுத் தான் நம்ம மன்னன் அம்பிகாபதியெ அரமனெக்கி வரவேணா மென்னு நிறுத்தி விட்டாராக்கும். அதுக்கு முன்னே அம்பிகாபதி தான் மன்னன் மகளுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுத்து வந்தானாம்.

வெள்ளைச்சி : ஆமா, மா; அவன் பிழப்பு வாயிலெ மண்ணெப் போட்டியெ! ஐயோ! பாவம்! அம்பிகாபதி அவங்கப்பாவெவிட அறிவாளியாம். ரொம்ப ரொம்பப் படிச்சவனாம். அல்லாமலும், அவன் எவ்வளவு அழகாயிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/214&oldid=1581011" இலிருந்து மீள்விக்கப்பட்டது