உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

சீரா யிருந்ததும் எங்கள் குலம் நம்ம

ஊராளும் மன்னனோ உயர்ந்த வேளாளன்

ஒச்சனுக் கொப்பா உரைக்கலாமோ கண்ணே.

வெள்ளைச்சி :

மையல் கொண்டு மயங்கிய மைந்தர்க்குப் பொய்யே குலமுங் குடியும் பொருளும் இறைவன் வகுத்த எழுத்தை அழிக்க மறையவராலும் மாளாது மச்சான்

மற்றவராலது மாளுமோ சொல்லாய்.

(ஒட்டுக் கேட்கும் அரசன் அமைச்சரை நோக்கிக் கூறுகின்றான்)

183

சோழன் : கேட்டீரா நம்பிப் பிள்ளை! இச்செய்தி கேட்டு என்னுயிரும் உடம்புந் துடிக்கின்றன! எமது உயர் வொப்பிலா வேளாண் அரசகுடிக்குத் தீராப் பெருவசையை உண்டாக்கின அம்பிகாபதியை இப்போதே சென்று என் வாளால் இருகூறாய் வெட்டி வீழ்த்தட்டுமா?

அமைச்சர் : மன்னர் பெருமான் சிறிது பொறுக்க வேண்டும். எதனையுந் தீரத்தெளிய ஆராய்ந்து செய்வதே நமது பெருங் கடமை. ஆராய்ந்து தெளியுங்காற் கண்ணாற் கண்டதும் பொய்யாய் விடும். காதாற் கேட்டதும் பொய்யாய் விடும். யான் அன்றைக்குத் தெரிவித்தபடி இவர்கள் இன்னும் ஆள்மாறாட்ட மாகவே அம்பிகாபதியைப் பற்றிப் பேசுகிறார்கள். ஆதலால் இதனை இன்னும் நாம் நன்காராய்ந்து பார்க்கவேண்டும்.

சோழன் : நீர் சொல்வது உண்மைதான். இதனை நம் ஆசிரியர் ஒட்டக்கூத்தரிடம் தெரிவித்து அவர் கூறும் முடிபு யாதென்று பார்ப்பம் (இருவரும் போய் விடுகின்றனர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/216&oldid=1581028" இலிருந்து மீள்விக்கப்பட்டது