உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184

ஐந்தாம் நிகழ்ச்சி : இரண்டாங் காட்சி

களம் : அரண்மனை உணவு விடுதி

காலம் : உச்சிக் காலம்

கம்பர் : (தம் மகன் அம்பிகாபதியை நோக்கி) குழந்தாய்! நம்மரசன் சிறப்பு நாட்களில் மட்டுந்தான் நம்மை இங்கு வருவித்து விருந்து செய்விப்பது வழக்கம். இப்போதோ சிறப்பொன்றும் இல்லாதிருக்கவும் நம்மை இங்கே விருந்துக்கு அழைத்திருப்பதை உற்று நினைத்தால் இதில் ஏதோ ஒரு சூழ்ச்சியிருக்கின்றது. நீ கருத்தாயிருக்க வேண்டும்.

அம்பிகாபதி : ஆம் அப்பா, இதில் ஏதோ ஒரு சூழல். நீங்கள் சொல்லும் வண்ணமே கருத்தாயிருக்கின்றேன்.

(நயினார் பிள்ளை வருகின்றான்)

நயினார் : ஆசிரியர்க்கு வணக்கம் (அம்பிகாபதியைக் கைதொட்டு) அருமை நண்ப! நலந்தானே? சில நாட்களாக யான் நின்னைப் பார்க்கவில்லையே?

கம்பர் : நயினார், நன்கினிது வாழ்தி! அரசன் எம்மை ங்கு விருந்துக்கு அழைத்திருக்கிறான். உன்னையும் உன் தந்தையாரையும் அழைத்திருப்பானென்று நம்புகின்றேம்.

நயினார் : ஆம், ஐயனே! என் தந்தையார் இன்னுஞ் சிறிது நேரத்தில் இங்கே வந்து விடுவார். முன்னே சென்று அம்பி காபதியை விழிப்பாயிருக்கும்படி சால்ல என்னை

விரைந்தேவினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/217&oldid=1581036" இலிருந்து மீள்விக்கப்பட்டது