உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

கம்பர் : காரணம் ஏதேனுந் தெரியுமா?

185

நயினார் : என் தந்தையார் இதில் ஏதோ கவலையுடைய காணப்பட்டார். வேறொன்றும் அவர் திறந்து

வராகக்

சொல்லவில்லை.

(அமைச்சர் நம்பிப்பிள்ளையும் ஒட்டக்கூத்தரும் வர மூவரும் அவ்விருவரையும் வணங்குகின்றனர்).

கூத்தர் : கம்பரே! நாம் ஒருங்கிருந்து விருந்துண்டு நீண்ட நாளாயிற்று. நும் அருமைப் புதல்வன் அம்பிகா பதியால் நாம் இன்றைக்கு ஒருங்கிருந் துணவுகொள்ளும் வாய்ப்பு நேர்ந்தது. நீர் இராமாயணம் அரங்கேற்றுதற் பொருட்டு வெளியூர் சென்றிருந்த காலையில், அம்பிகாபதி நம் மன்னர் பிரான் திருமகள் அமராவதிக்குக் கல்வி கற்பித்து அவளை அதில் தேர்ச்சிபெறச் செய்தனன். அதனைப் பாராட்டி மகிழ்தற்பொருட்டாகவே நம்வேந்தர் இவ்விருந் தாட்டினைச் செய்விக்கின்றார். இதில் நம்மரசர் நம்மோடிருந்துண வருந்துவர்; அவர் தந்திருமகள் அமராவதியே நமக்கெல்லாம் உணவுபரிமாறுவாள். (இது கேட்டெல்லாருந் துணுக்குறு கின்றனர்)

(அரசன் தன் சமையற்காரன் ஏவலருடன் வர எல்லாரும் அரசனை வாழ்த்துகின்றனர்)

எல்லாரும் : அரசர் பெருமான் நீடு வாழ்க! வேந்தற்கு வெற்றி சிறக்க!

அரசன் எல்லோர்க்கும் வணக்கம்! எல்லாரும் ருக்கையில் அமருங்கள்! (சினங்கொண்ட சிரிப்புடன் அம்பிகாபதியை அணுகி) ஆ! அம்பிகாபதி! எவ்வளவு நன்றாய் நீ என் மகளுக்குக் கல்வி கற்பித்திருக்கின்றனை! இவ்வுழைப்பில் நின் ஆவியையே நீ கொடுத்துவிட்டனை! தனை உறுதிப்படுத்திக் காட்டவே நின்னை இவ்விருந்துக்கு அழைக்கலாயினோம்! (இவ்வாறு சொல்லிக் கொண்டே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/218&oldid=1581045" இலிருந்து மீள்விக்கப்பட்டது