உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

187

(அங்ஙனமே சென்று அவன் அவளை அழைத்து வந்துவிட, அரசன் அவளைச் சில வினாய் ஐயந் தீர்ந்தபின் சிறிது பொருள் கொடுத்து அவளைப் போக விடுகின்றான். எல்லாரும் உணவு கொண்டபின்.)

ஏடா துத்தி, எல்லார்க்குங் கலவைச் சாந்தம் பூசி, வெற்றிலை பாக்குக் கொடு.

(எல்லாரும் மன்னனை வாழ்த்தி விடைபெற்று உணவு விடுதியை விட்டுப் போகையில், அம்பிகாபதி, மட்டும் எல்லார்க்கும் பின்னே மெல்லச் செல்லுதலையும், அமராவதி ஓர் ஒதுக்கிடத்திற் சிறிது நின்று அவற்குக் கண்ணாற் குறி செய்து போதலையும் அரசன் மறைவிற்கண்டு)

ஏடா கடம்பா, அம்பிகாபதி எவ்வழியாய் எங்கே செல்கின்றான் என்பதை ஓடிச்சென்று பார்த்துவா! ஏடாதுத்தி, தத்தையை ஓடிச் சென்றழைத்துவா!

(இதற்கிடையில் எதிரே வந்த தோழி நீலம் தான் கொணர்ந்த காவேரியின் ஆடைகளை அம்பிகாபதிக்கு அணிவித்துக் கன்னி மாடப் பூங்காவில் வேனில் மண்டபத்திற்கு அவனை அழைத்துச் சென்றுவிடுகின்றாள்.)

அமராவதி : என்னாருயிர் பெருமானே! இப் பிற்பகல் காலத்தில் நுங்களை இங்கே யான் வருவித்த பிழையைப் பொறுத்தல் வேண்டும். என் தந்தையாருடன் நீங்களெல் லீரும் இருந்து விருந்தருந்துகையில் என்னைக் கண்டவுடன் நீங்கள் பாட்டுப் பாடியதைக் கண்டு என்னுயிர் என்னுடம் பையே விட்டுப் போய்விடும்போலாயிற்று! அம்மையின் பேரருளால் நீங்கள் பாட்டை முடிக்குமுன் நுங்கள் தந்தையார் அதனை வேறொரு முகமாய்த் திருப்பி முடித்தார்! அவர் முடித்தற்கு ஏற்பவே, அந்நேரத்திற்கொட்டிக் கிழங்கு விற்பாளொருத்தியும் வந்து தலைப்பட்டாள்! இல்லை ல யானால் உங்கள் நிலைமை யாதாயிருக்கும்! இங்ஙனம் நீங்கள் முன்பின் ஆராய்ந்து பாராமற் செய்த செயல்களினாலேயே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/220&oldid=1581061" இலிருந்து மீள்விக்கப்பட்டது