உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

❖ LDM MLDM-12 →

என் தந்தையார் உங்கள்மேல் ஐயமுஞ் சினமுங்கொண்டு உங்களைக் கையுங் களவுமாய்ப் பிடித்து ஒறுக்க முனைந் திருக்கிறாரென்று அறிகின்றேன். நீங்கள் அரண்மனைப் பூந்தோட்டத்திலுள்ள மலர்களைக் கவர்ந்து என்பாற் கொணர்ந்தமையன்றோ இத்தனை துன்பத்திற்கும் அடிக் காரணமாயிருக்கின்றது! இதற்காகத் தானா நீங்கள் எளியேன் மீது காதலன்பு பாராட்டுவது? (கண்ணீர் சொரிகின்றாள்)

அம்பிகாபதி : கண்மணி, என்னாருயிர்க்காதலி! யான் என்னையே மறந்து நின்மேல் அப்போது பாடிவிட்டேன். அதனால் நினக்குப் பெருங்கலக்கத்தை விளைத்த எனது பெரும் பிழையைப் பொறு.

மின்னற் கொடியோ! மேற்பிறப்பில் யான்செய் தவத்தின் மிகுபயனோ! பன்னாள் முயன்று பாவையரின்

வனப்பை யெல்லாம் பகுத்தெடுத்துக்

கன்னற் கண்டில் உருவாக்கிக்

கடவுள் விடுத்த கலைமகளோ! என்னென் றுரைப்பென் நினைக்கண்ட

அப்போ தென்னை மறந்தனனே!

அமராவதி : பெரும! நீங்கள் பாட்டுப் பாடுவதில் மிகுதிறம் வாய்ந்தவர்கள் தாம்! நெருப்பாற்றின் ஊடுமயிர்ப் பாலத்தின்மேற்செல்பவர்களாக நாமோ வாழ்நாட் கழிக் கின்றோம். இவ்விடத்தை விட்டுத் தப்பிப்போக உடனே வழி செய்யுங்கள்!

அம்பிகாபதி : அங்ஙனமே செய்கின்றேன் கண்மணி! எல்லாம் இரண்டொரு நாளில் வந்து தெரிவிக்கின்றேன். (காவேரியுடையிலேயே போய்

விடுகின்றான்.)

(கடம்பனுந் துத்தியுந் தத்தையுடன் அரசன் பால் வந்து)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/221&oldid=1581070" இலிருந்து மீள்விக்கப்பட்டது