உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

மன்னர் பெருமான் நீடுவாழ்க! (என்று வாழ்த்த)

189

அரசன் : ஏ கடம்பா! அம்பிகாபதி எவ்வழியாய்ச் சென்றான்?

கட ம்பன் : ஐயனே! மிகு விரைவாய்ச் சென்று நோக்கி யும், என் கண்களுக்கு அகப்படாமலே அவர் போய்விட்டார். அரசன் : ஏடி தத்தே! இளவரசி எங்கிருக்கின்றாள்? எவருடன் இருக்கின்றாள்? விரைந்துபோய்ப் பார்த்துவா!

தத்தை :

பெருமானே! இப்போதுதான் இளவரசி யாரின் வேனில் மண்டபத்தருகிலிருந்து வருகின்றேன். இளவரசியாருங் காவேரியம்மையும் பேசிக்கொண்டிருந் தார்கள். துத்தி வந்தென்னை அழைக்கும்போதுதான் காவேரியம்மை தமதில்லத்திற்குச் சென்றனர்.

அரசன் : நல்லது, நீ போ! ஏ கடம்பா, நீ கூத்தரிடம் ஓடிப்போய் அவரை இவ்வுணவு விடுதிக்கே மீண்டும் அழைத்துவா!

(அவன் போய்ச் சிறிது நேரத்தில் அவரை அழைத்து

வருகின்றான்.)

கூத்தர் : அரசே! நீடுவாழ்க! மீண்டும் என்னை இங்கு ஏன் வருவித்தனை? யாது நேர்ந்தது? இன்னும் ஏன் ங்கேயே இருக்கின்றனை?

அரசன் : ஐயனே! சிறிது முன்னே நடந்த விருந்தினால் என் ஐயந்தீர்ந்தது; உண்மை உள்ளங்கை நெல்லிக்கனி போல் நன்கு விளங்கிற்று. அம்பிகாபதியும் அமராவதியும் ஒருவரை யொருவர் காதலிக்கின்றனர்! எங்ஙனமோ மறைவிற் கூடிக் களிக்கின்றனர்! இதைக் கம்பர்க்குக் குறிப்பாய்த் தெரிவித்தேன்; ஆனால், அவர் அதை நம்பவில்லை! எமது எமது வேளாள அரசகுலத்திற்கு இழுக்குத் தேடிய அவ்வோச்சப் பயலை என் வாளால் இரு கூறாக்க முனைந்தேன்! தீர ஆராய்ந்து முறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/222&oldid=1581078" இலிருந்து மீள்விக்கப்பட்டது