உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

197

ஞ்

அமைச்சர் : ஆம், அரசியார் கூறுவது மெய்தான். ஆனாலும் இதைப்பற்றி இளவரசியாரது கருத்து இன்னதென்று தெரிந்து கொள்வது, நன்று. (இருவரும் இளவரசியிடஞ் செல்கின்றனர். இவர்களைக் கண்டதும் அமராவதி வருந்தி எழுகின்றாள்) அம்மா, வருந்தி எழ வேண்டாம். படுக்கையிலே அமருங்கள்! அம்பிகாபதியாரைச் சிறையினின்றுந் தப்புவித்து வடநாடு கடத்த எண்ணுகின்றோம்; உங்களுடம்பாடு தெரியவேண்டும்.

அமராவதி : ன்னையும் இந்த அரண்மனைச் சிறையினின்றும் விடுவித்து அவருடன் போகவிடும்படி உங்களைப் பணிவுடன் வேண்டிக் கொள்கிறேன்.

அரசி :

கண்ணே! உன்னைப் பிரிந்திருந்து யான்

எங்ஙனம் உயிர் வாழ்வேன்?

அமராவதி : அம்மா, உன்னை அப்பாவுடன் இந் நாட்டுக்குப் போக விடுங்காற் பாட்டியும் இங்ஙனந்தானே ஆற்றாமைப்பட்டுப், பின்னர் மனந்தேறியிருப்பார்கள்.

அரசி : ஆம் கண்ணே, அவர்கள் நினைத்தபோதெல் லாம் என்னைப் பார்க்கலாமாகையால் அவர்கள் மனந்தேற இடமிருக்கின்றது; எனக்கோ அங்ஙனமில்லையே!

அமராவதி : அஃதுண்மைதான் அம்மா ஆனாலும், அப்பா மனந்திருந்தினால் ங்கே திரும்பி வரலா

மன்றோ?

நாங்கள்

அரசி : கண்ணே நின் அப்பாவின் உள்ளத்தை எங்ஙன மாவது சிலநாளில் திருத்தி விடுகின்றேன்; அது வரையில் அம்பிகாபதி வெளிநாட்டிலிருக்கட்டும்; நீ எங்கள்பால்

ரு.

அமராவதி : அம்மா, ஒருகாலும் அப்பா மனந்திருந்தார். ஆதலால், என் கணவரைப் பிரிந்து யான் ஒரு நொடியும் உயிர் வாழேன்.

அமைச்சர் : (அரசியை நோக்கி) அம்மா இளவரசி யாரும் அம்பிகாபதியாருடன் கூடியே வெளிநாடு செல்லட்டும். சில தினங்களில் இவர்களிருவரையும் இங்கு வருவித்து மணஞ்செய்து முடிப்போம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/230&oldid=1581145" இலிருந்து மீள்விக்கப்பட்டது