உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196

❖ LDMMLDMELD -12 →

கொண்டுபோய் விடுகின்றான். இஃதறிந்து அமராவதி ஒருவாறு மனந்தேறிக் கண்விழிக்க, அரசியார் ஆற்றாமை நீங்கி அவளைத் தமது உவளகத்திற்கு எடுப்பித்துச் செல்கின்றனர். அதன் பின் அரசன் அமைச்சரை நோக்கி) நம்பிப்பிள்ளே! நாளை நமதரசவையில் இதனை ஆராய்வம். நீங்களெல்லீரும் இப்போதில்லஞ் செல்லலாம்.

அமைச்சர் : அங்ஙனமே, செய்வம், பெருமானே, செல்லு தற்கு முன் அரசியாரது உவளகத்திற்குப் போய், இளவரசி யாரின் உடல் நிலையத் தெரிந்துகொண்டு யாங்கள் ஏக விடையருளல் வேண்டும்.

அரசன் : ஆம், நீங்கள் மட்டும் உவளகஞ் செல்லலாம். கம்பர் உடனே வெளிச் செல்லல் வேண்டும். அவர் இனி இவ்வரண்மனையினுள் நுழையலாகாது. யான் எனது மாளிகைக்குச் செல்கின்றேன். (கம்பர் ஆற்றாமை நீங்கியும் வருத்தத்துடன் தமதில்லஞ்சென்று விடுகின்றனர்.)

வி

அமைச்சர் : (உவளகத்திற் சென்ற அரசியாரை வணங்கி) இளவரசியார்க்கு ப்போதுடம்பின் நிலை எவ்வாறிருக்கிறது?

அரசி : உடம்பின் நிலை சிறிது நன்றே. ஆனால் அவள் L மனத்தைத் தேற்றுவதற்கோ என்னாலும், அவளுயிர்த் தோழியாலுஞ் சிறிதும் இயலவில்லை. அம்பிகாபதியை நம் மன்னர் கொன்றுவிடுவரோ வென்றெண்ணி ஏங்குகின்றாள்! அவளுயிர் தத்தளிக்கின்றது! எங்கே அவளுயிர் போய் விடுமோ என்று நினைக்க என்னுயிர் தத்தளிக்கின்றது! அவளுக்குப் பின் யான் உயிர் வாழேன்!

அமைச்சர் : அம்மா, சிறிது மனத்தைத் தேற்றிக் கொள்ளுங்கள்!அம்பிகாபதியைச் சிறைக் களத்தினின்றுந் தப்புவித்து, நம் மன்னரது ஆளுகைக்கு அப்பாற்பட்ட வடநாடு கடத்த வழியிருக்கின்றது.

அரசி : நம்பிப்பிள்ளை! நீங்கள் நீடுவாழ்க! அம்பிகா பதியைத் தப்புவித்தற்கு யாது வழி? அவனை வடநாடு கடத்தினால், அப்போதும் என் மகள் அவனைப் பிரித லாற்றாது உயிர் துறப்பளே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/229&oldid=1581137" இலிருந்து மீள்விக்கப்பட்டது