உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

195

அரசி : பெருமான்! என் மகளை என் செய்தீர்கள்? என் செய்தீர்கள்! (அமராவதியை எடுத்துத் தன் மார்பின்மேற் சார்த்திக்கொண்டு அழுதபடியாய்க்) கண்மணி! அமராவதி! என் தேடக்கிடையாச் செல்வமே! கண்ணை விழித்துப்பார்! (அரசனை நோக்கி) என் ஒரே மகளுக்குப் பாடஞ் சொல்ல இளைஞன் அம்பிகாபதியை அமர்த்த வேண்டாமென்று நான் துவக்கத்திலேயே சொல்லியும், என் சொல்லைக் கேளாமல் நீங்களே செய்துவிட்டு, இப்போதிவர்கண்மேற் பழி சுமத்தி இவர்களைக் கொல்ல முனைவது முறையா? இது தெய்வத்திற்கு அடுக்குமா! கண்ணே! அமராவதி! எழுந்திரு! என்னைப் பார்! (தேம்புகின்றாள்.)

வி

சு

அமைச்சர் : அம்மா! தங்கள் மகளார்க்கு ஒன்றும் நேர்ந்து ல்லை! மன அதிர்ச்சியினால் மயக்க முற்றிருக்கின்றார். அவர்களைத் தங்கள் மாளிகைக்கு எடுப்பித்துச் செல்லுங்கள். இன்னுஞ் சிறிது நேரத்தில் அங்கு வருகின்றோம்.

அமைச்சர் : மன்னர் பெரும! பொறுத்தருளல் வேண்டும்! ப்போது அம்பிகாபதியைக் கொலை செய்வித்தால், இளவரசியார் உயிர்நீங்குவார்! அது கண்டு உளம் ஆற்றாது அரசியாரும் உயிர் நீப்பர்! அதுவேயு மன்றி, அரண்மனை யின் அகத்து நிகழ்ந்த இந்நிகழ்ச்சியினைப் புறத்தார் எவரும் அறியார்; அதனால் அம்பிகாபதியை ஆராயாது கொலை செய்வித்தார் எனப் பழிச் சொற் பரப்பாநிற்பர். நம் ஏனைய மைச்சரும் அவையத்தாரும் இஃது அரசியன் முறைக்குச் சிறிதும் அடாததாகும் என்றும் கருதாநிற்பர்! ஆகையால், கையால், இதனை எல்லாரும் அறியத் தீர ஆராய்ந்து எல்லா அமைச்சரும் அவையத்தாரும் முடிவு செய்யுமாறு நாம் செய்வதே தக்கதாகும்.

அரசன் : (சீற்றந்தவிர்ந்து) ஆம், நம்பிப்பிள்ளே, நீங்கள் சொல்லும் வண்ணஞ் செய்வது முறைதான். அடே! கடம்பா! இவனை நமது சிறைக்களத்திற், கொண்டுபோய் அடைத்து, அதன் சாவியை என்பால் உடனே கொண்டுவா! (கடம்பன் காவலருடன் அம்பிகாபதியைச்

சிறைக்களத்திற்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/228&oldid=1581129" இலிருந்து மீள்விக்கப்பட்டது