உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

194

❖ LDMMLDMOLD-12 →

அரசன் : யாது அது? சொல்லும்.

கம்பர் : மன்னர்பிரான் கருதுமாறு, என் மகன் இது காறும் மாதர் எவரையும் நச்சி வழுவியொழுகினவன் அல்லன். ஊழ்வினையின் வலியாலும், இளைஞரும் அழகி யருமான இவ்விருவரும் நேரிருந்து கல்வி கற்கவுங் கற்பிக் கவும் நாம்செய்த ஏற்பாட்டினாலுமே இங்ஙனம் நேர்ந்து விட்டது! இனி என் செய்வது! காதலிற் கழுமிய இவ் விருவரையும் மணம் பொருத்துதலே தக்கது.

அரசன் : (உளங் கொதித்துக்) கம்பரே, நீரன்றி வேறெவ ரேனும் இச்சொற்களைச் சொல்லியிருப்பாராயின் அவர் உடனே என் கத்திக்கு ரையாகியிருப்பர்! வேளாள அரச குலத்திற் பிறந்த என் மகளையா எம்மையண்டிப் பாடிப் பிழைக்கும் ஓர் ஓச்சப்பயலுக்கு மணஞ் செய்து கொடுப்பது? அஃது ஒருகாலும் நடவாது!

அமராவதி : (அதுகேட்டு அழுது) ஓ! ஐயனே! யான் உங்கள்

மகள் அல்லேன்! அல்லேன்! யான் ஓர் ஏழைக்

குடிக்குரிய ஓர் எளிய பெண்! யான் என் கணவனுடன் கூடி வெளியே எமதேழைக் குடிலுக்குச் செல்ல மனமிரங்கி விடை கொடுங்கள்!

அரசன் : (இன்னும் மிக வெகுண்டு) அல்லை! நீ என் மகள் அல்லை!இவ்வரண்மனையில் களவொழுக்கம் நிகழ்த்திய நும்மிருவரையும் உயிருடன் விடப்போகிறதில்லை. ஏடா கடம்பா, இவ்வரண்மனையிற் களவாய்ப் புகுந்து தகாதது செய்த இப்பயல் அம்பிகாபதியைக் காவலருடன் கொலை களத்துக்குடனே கொண்டுபோய் வெட்டி வீழ்த்துக!

அமராவதி : (அச்சொற் கேட்டு) ஐயோ! ஐயோ! சிவனே! என்னுயிர் போகின்றதே! எமக்கு யாருந்துணையில்லையா! ஐயோ! தெய்வமே! இது நின் திருவுளத்திற்கடுக்குமா! (சோர்ந்து விழுகின்றாள்.)

(அரசி அங்கயற்கண்ணி ஓடி வருகின்றாள்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/227&oldid=1581120" இலிருந்து மீள்விக்கப்பட்டது