உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

193

அமராவதி : (அரசன் கையைப் பிடித்து) அப்பா அவரை ஒன்றுஞ் செய்யவேண்டாம்! வேண்டாம்! அவர் மேற் குற்றஞ் சிறிதுமில்லை! யானே அவரை வலிந்து இங்கு வரவழைத்தேன்!

அரசன் : (அமராவதியின் கையை உதறி) அடி பேயே! நீ என் மகளா! குலத்தைக் கெடுக்கவந்த கோடரிக் காம்பே! (என்று சினந்து கூவி அவளைக் கீழே பிடித்துத் தள்ளு கின்றான்.)

அமராவதி : (கீழ்விழுந்தபடியே அழுதகண்ணினளாய்) அப்பா! யான் உங்கள் மகள் அல்லளோ? அரசர் புதல்விகள் தாம் காதலித்த ஆடவரை மணந்து கொள்ளவில்லையா? யானும் அவர்களைப் போல் மகிழ்ந்திருக்க வேண்டாமா?

அமைச்சர் நம்பிப்பிள்ளை : மன்னர் பிரானே! சினந் தணிந்தருளல் வேண்டும்.

அரசன் : (அமைச்சரை நோக்கி) இவனை வேறு யாது செய்யலாம்? என் சொல்லை நம்பாத கம்பர் அரண்மனைத் தலைவாயிலில் நிற்கின்றார்; அவரை உடனே வருவியுங்கள்.

(தம்முடன் வந்த காவலன் ஒருவனை அவர்பால் விடுக்கக் கம்பர் நடுங்கிக்கொண்டு வருகின்றார்.)

அரசன் : (கம்பரை நோக்கி) பார்த்தீரா கம்பரே! நும்மகன் அரண்மனையென்று நினைத்தனனா?

தனை

வேசி

ன்று நினைத்தனனா? அழகிய மாதர் எவராயிருப்பினும் அவரைக் கெடுக்க முனைந்திருக்கும் இப்பயல் உயிரோடிருந் தால் இன்னும் எத்தனை மாதரைக் கற்பழித்துக் கெடுத்து டுவான்! என் சொல்லை நம்பாத நீர் இப்போதென்ன சொல்லுகிறீர்?

கம்பர் : அரசே! தஞ்சம்! நாடாளும் மன்னவனாகிய நின்கையில் எங்கள் உயிரும் உடலும் பொருளும் அகப் பட்டிருக்கின்றன! நீ எது வேண்டுமாயினுஞ் செய்யலாம். துணையுஞ் செயலும் அற்ற எளியேங்கள் யாது செய்யக் கூடும்? ஆனால் ஒன்று -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/226&oldid=1581112" இலிருந்து மீள்விக்கப்பட்டது