உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

மறைமலையம் 12

அமராவதி : அதற்கும் நீங்கள்தாம் எனக்குப் பாடங் கற்பித்திருக்கின்றீர்களே!

அம்பிகாபதி : பகடிபண்ணாதே! என்ன பாடம்? புலப் படச் சொல்லு?

அமராவதி : நீங்கள் உங்கள் தங்கையின் உடையில் வருவது போல யானும் என் உடையில் வரலா மன்றோ?

தமையன்

அம்பிகாபதி : ஆம், ஆம் முன்னமே இஃதென் அறிவிற் றென்படாமற் போயிற்று. இடர்ப்பட்ட நேரத்தில் அவ் விடரைத் தப்புவித்தற்கேற்ற வழிநுண்ணறிவு வாய்ந்த பெண்மக்கட்குக் கதுமெனத் தோன்றுதல்போல எத்துணை நுண்ணறிவு வாய்ந்த ஆண்மக்கட்குந் தோன்றுவதில்லை. நின்பால் வருவதற்கொரு வழிகாணாமல் யான் மிகவுந் தயங்கிக் கொண்டிருக்கையில் என் தங்கையின் உடையில் வரும்படி கற்பித்தவள் நின்தோழி நீலமேயாவள்.

அமராவதி : (திடுமெனக்கலங்கி) பெருமான் பேசா தீர்கள்! என் தோழி நீலத்தைத் தவிர வேறெவரும் வரப் பெறாத இவ்விடத்தில் இந்நேரத்தில் யாரோ விரைந்து வரும் அரவங் கேட்கின்றது!

(இது சொல்லி முடிகையில் அரசன் அமைச்சர் காவலாளருடன் மண்டபத்துள் வந்து நுழைகின்றான்)

அரசன் : (மிக்க (மிக்க சீற்றத்துடன் அம்பிகாபதி மேற் பாய்ந்து) அடே ஓச்சப்பயலே! நன்றி கெட்ட கயவனே! உண்ட வீட்டிற்கே இரண்டகம் பண்ணின திருட்டுப் பயலே! எங்க அரச குடிக்குப் பழிச்சொல் விளைத்த பாவி! நீ ப்போதே பாழாய் ஒழி!

(என்று கடிந்து கூறி அவனைக் குத்தி மடிப்பதற்குத் தன் குத்துவாளை ஓங்குகின்றான்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/225&oldid=1581103" இலிருந்து மீள்விக்கப்பட்டது