உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191

களம்

ஐந்தாம் நிகழ்ச்சி : மூன்றாங் காட்சி

அமராவதியின் கன்னிமாடப் பூங்கா மண்டபம்

காலம் : மறைநிலாக் கால நள்ளிரவு.

அமராவதி : என்னாருயிர்ப் பெருமானே! இப்போது நாம் துய்க்கும் இன்பம் இன்பமாக எனக்குத் தோன்றவில்லை. என் தந்தை நம்மைக் கையுங் களவுமாய்க் கண்டுபிடிக்கும் முயற்சியிலிருக்கின்றாரென்று என்றோழி நீலத்தின் வாயிலாய் அறிகின்றேன். நீங்கள் இங்கிருக்கும் ஒவ்வொரு நொடிப்பொழுதும் என்னுயிரை எரிக்கும் நெருப்பின் சுடரா யிருக்கின்றது! உங்களைக் காணாது கழிக்கும் ஒவ்வோரிமைப் பொழுதுமோ என்னு லையும் உயிரையும் ஒருங்கே அழிக்கும் நஞ்சாயிருக்கின்றது! என் செய்வேன்! என் தெய்வமே!

அம்பிகாபதி : கண்மணி! இன்னுஞ் சிலநாள் நெஞ்சைத் தேற்றிக்கொண்டிரு! நம்மை அழைத்துக் கொண்டு வடநாடு தந்தையார்

சல்ல

என்

எற்பாடு

செய் சய்

திருக்கின்றாரென்று முன்னமே உனக்குத் தெரிவித்திருக் கின்றேன். என்னாருயிர் நண்பன் நயினார் பிள்ளை இதன் பொருட்டு என் தந்தைக்கும் நமக்கும் இடையில் நின்று உதவி செய்கின்றான். இவ்வரண்மனைக்கு வெளியே நாம் எவ்வாறு செல்வதென்பதுதான் பேரிடராய்த் தோன்றுகின்றது! பகலிலுஞ் செல்லல் இயலாது. இரவிலுஞ் செல்லல் இயலாது. ஆனால் அவ்விரண்டுக்கும் டைப்பட்ட மயங்கன் மாலையே நீ வளி வருவதற்கேற்ற காலம்; அந்நேரத்தில் நீ எங்ஙனம் வெளிவருவை? அரண்மனையின் அகத்தும் புறத்துமுள்ள காவலர்களைத் தப்பி நீ வெளி வருதல் யாங்ஙனம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/224&oldid=1581095" இலிருந்து மீள்விக்கப்பட்டது