உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199

ஐந்தாம் நிகழ்ச்சி : நான்காம் காட்சி

களம் : அரசி அங்கயற் கண்ணியின் மாளி

காலம் : பிற்பகல்

கை

தங்கம் : அரசியார்க்கு என் புல்லிய வணக்கம்.

அரசி : கண்மணி தங்கம், சென்ற இரண்டு நாட்களாக நின் தங்கை அமராவதியும் யானும் நின் வருகையை மிக்க ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். என்

தோழியை விடுத்து நின்னை இங்கு வருவிக்கவும்

அச்சமாய்விட்டது! நம் அரசர் இப்போது வைத்திருக்குங் காவல் மிகக் கடுமையாய் இருக்கின்றது! கம்பர்க்கு வேண்டியவர் எவருமே இந்த அரண்மனைப் பக்கமும் வரலாகாதென்று நம்மரசரது கட்டளை பிறந்திருக்கின்றது. ஆதலாற்றான், நீ இங்கே வரும் வழக்கப்படியே வரட்டுமென்று துடிப்புடன் காத்துக்கொண்டிருந்தோம்!

நீ

தங்கம் : ஆம், தேவியார் கூறுகின்றபடியே அரண்மனை யின் அகத்தும் புறத்தும் காவலர்கள் எந்நேரமும் உலாவிக் கொண்டிருந்தனர். அதைக் கண்டு வரும்போது என் நெஞ்சந் துணுக்குற்றது! யான் இங்கு வருகையில் அவர்கள் என்னை உற்றுற்று நோக்கினர்! தங்கை அமராவதி எங்ஙனமிருக் கின்றாள்? அம்பிகாபதியார் சிறையில் எந்நிலையிருக் கின்றார்?

அரசி : இருவரும் ஒருவர் பொருட்டொருவர் படுந் துயரங் கண்ணாற் காணவுங் காதாற் கேட்கவுங் கூடியதா யில்லை! என் நெஞ்சம் இருகூறாய்ப் பிளந்து போகின்றது! நம் மன்னர்பிரான் இவர்கட்குத் தீங்கிழைக்கும் முன்னமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/232&oldid=1581162" இலிருந்து மீள்விக்கப்பட்டது