உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200

❖ LDM MLDMOED -12

இருவருந் தம்முயிரை இழந்துவிடுவர் போற்றோன்று கின்றனர்! அம்பிகாபதியைப் பற்றி நமது அரசவையில் என்ன முடிவு செய்யப்படுகின்றது?

தங்கம் : அதனைச் சிறிதறிவேன் தாயே! தமையனார் நயினார்பிள்ளை சொல்லத் தெரிந்தேன். நம் அரசவையி லுள்ள அமைச்சர் ஐவரில் மூவர் நம்மரசர் பெருமான் நோக்கம் அறிந்து மேற்சொல்ல என் மனமும் வாயும் உடலும் நடுங்குகின்றன!

L

அரசி : (மனங்கலங்கி) அறிந்தேன்! மற்றை அமைச்சர் இருவருங் கூறிய முடிபு யாது?

66

தங்கம் : (நெஞ்சந்தேறி) நம் முதலமைச்சர் நம்பிப் பிள்ளையும், படைத்தலைமையமைச்சரும் அம்பிகாபதியார் பாலுங்குற்றமில்லை, நம்மிளவரசியார்பாலுங் குற்றமில்லை; இளமையும் அழகும் அறிவும் நிறைந்த அவ்விருவரையும் நெருங்கவிட்டவர் பாற்றான் குற்றமுளது என்று முடிவு கூறிவிட்டனர். நம் மன்னரோ நம் முதலமைச்சர் முடிபையும் நம் படைத்தலைவர் முடிபையுங் கடந்து ஏதுஞ்செய்ய மாட்டாதவராய் மனம் உளைந்து நெடுங்காலம் நம் அரசவையில் முதலமைச்சராயிருந்து விடுதி பெற்றிருக்கும் ஒட்டக்கூத்தர் இத்தகைய சிக்கலான நிகழ்ச்சிகளிற் சிக்கறுத்து முடிவுகூறும் முதிர்ந்த பழக்கம் வாய்ந்தவர், ஆகையால், அவர் கூறும் முடிபு தெரிந்து அதன்படி செய் தலே முறை” என்று அறிவித்திருக்கின்றனராம். இப்போது ஒட்டக்கூத்தர்க்கு உடம்பு நலமில்லை; ஆண்டிலும் முதிர்ந்த அவர் நலம் பெற்று வந்து தீர்ப்புச் சொல்ல இன்னும் இரண்டு கிழமையாகுமாம்.

அரசி : ஐயோ! அந்த ஒட்டக்கூத்தரா! அவர் இரக்க மில்லா வன்னெஞ்சக் கொடியராயிற்றே! நின்னருமைத் தந்தையை அவர் படுத்திவைத்த பாடெல்லாம் என்னெஞ்சை விட்டு இன்னும் அகலவில்லையே! அவர் இழைத்த தீங்கு களால் உள்ளம் நைந்தன்றோ நின் தந்தை இறந்து போயினார்! ஒரே மகளான உனக்குத் திருமணஞ் செய்து பார்க்குமுன் தாம் இறப்பதை நினைந்து நினைந்து அவர் உள்ளங்கவன்று வருந்திய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/233&oldid=1581166" இலிருந்து மீள்விக்கப்பட்டது